Roja : நடிகை ரோஜா அவர்கள் தமிழ் திரையுலகைள நீங்காத இடம்பெற்ற ஒரு நடிகை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகத்திலும் முன்னனி நடிகராக வலம் வந்தவர். இவர் தற்போது ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக இருக்கிறார்.
தற்போது நடைபெற்ற கலா 40 என்ற நடன இயக்குனர் கலா மாஸ்டர் நிகழ்ச்சிக்கு வருகை தந்து மேலும் இந்த நிகழ்ச்சியை அழகுப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தது மிகவும் சந்தோசமாக இருகிறது என்றும். கலா அக்காவிற்காக தொகுதியிலிருந்து ஓடி வந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
சூர்யா, ஜெயம் ரவியை உருவாக்கிய அக்கா..
40 வருட பழக்கத்திற்காக ஓடி வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். கலா அக்கா எங்களை போல நிறைய நடிகர்களை உருவாக்கியிருக்கிறார் என்றும். இந்த குடும்பத்தில் டான்ஸ் கற்றுக் கொண்டு சூர்யா,ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மீனா அவர்களை பார்த்து நாங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அங்கு சூட்டிங் ஸ்பாட்டில் எங்களை இரட்டையர்கள் என்று கூறுவார்கள் சில நேரங்களில் பேரை கூட மாற்றி மாற்றி கூப்பிட்டு உள்ளார்கள் என்றும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 4000 பாடல்களை இயக்கியுள்ளார். கலா அக்கா தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 4000 பாடல்களை இயக்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. தனது 12 வயதில் இருந்து அசிஸ்டன்ட் நடன இயக்குவதாக இருந்து 19 வது வயதில் நடன இயக்குனராக அவதாரம் எடுத்து அன்றிலிருந்து இன்று வரை சிறப்பாக தன் வேலையை செய்து கொண்டிருக்கிறார் என்றும் புகழாரம் சுற்றியுள்ள ரோஜா.
கலா அக்கா வாயிலிருந்து என்னையும் மீனாவையும் ஃபர்ஸ்ட் டேக் டான்சர் என கூறியது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இவ்வளவு பிசியான நேரத்திலும் தன் தொகுதியில் இருந்து 40 வருட பழக்கத்திற்காக ஒரு நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.