தேனாம்பேட்டையில் விஜய்க்கு ராயல் செட்டிங்.. திமுக-க்கு வெடி வைத்த தவெக

Vijay : சினிமாவில் அமைதியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி அபாரமான ரசிகர்களை பெற்றவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் இருந்து நீக்க முடியாத பெயர் என்றால் அது விஜய் என்ற பவர்ஃபுல்லான பெயர் தான்.

69 ஆவது ஜனநாயகன் திரைப்படம் தான் விஜயின் கடைசி படம். இந்த திரைப்படத்தை ஹச் வினோத் இயக்குகிறார். முழுவதும் அரசியலை களம் இறக்கிய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 9, 2026 திரைப்படம் வெளியாகும் என அறிக்கை வெளிவந்ததும் ரசிகர்களுக்கு ஒரே குஷி தான்.

சினிமாவில் இருந்தது போதும், இனி அரசியலுக்கு சென்று நல்லது செய்யலாம் என நினைத்து தளபதி என்ற பட்டப் பெயரில் இருந்து தற்போது தவெக கட்சித் தலைவர் எங்கள் தளபதி விஜய் என்று அன்போடு மக்களால் அழைக்கப்படுகிறார் TVK விஜய். திமுக மு க ஸ்டாலின், அதிமுக, பாஜக இவர்கள் முகத்தில் விஜய் அரசியலில் களம் இறங்கியதில் இருந்தே ஒரு பதட்டம் தென்படுகிறது.

பொதுத் தேர்தல் நிலவரங்கள் முதல் காவல்துறை பாதுகாப்பு வரை விஜயின் ஒவ்வொரு நடவடிக்கையும் தற்போது எதிரொளியாகி வருகிறது. அதிமுக, திமுக, பாஜக இதில் எந்த கட்சியுடனும் இணையாமல் தனித்து செயல்பட்டு வருகிறார்.

2026-இல் தவெக நிச்சயம் தமிழ்நாட்டில் உதயமாக வேண்டும் என்று பல இளைஞர்கள் குரல்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் விஜய் ரசிகர்கள் இப்போது விஜய்காக அரசியலில் தொண்டர்களாக களம் இறங்கி உள்ளனர்.

தவெக கட்சிக்கு தனி இடம்..

தற்போது ஒவ்வொரு பணியையும் மேற்கொண்டு வரும் தவெக கட்சியினர் தவெக கட்சிக்கு ஒரு பெரிய அலுவலகம் தொடங்கவுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் ITwing- க்கு கூடிய விரைவில் பெரிய அலுவளகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

TVk-Vijay
TVk-Vijay