Sam CS : சாம் CS நிறைய படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். ஆனால் 2020-க்கு பிறகு இப்படி ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்றே தமிழ் சினிமா மறந்துபோய் விட்டதா என்கிற அளவுக்கு இவர் பெயர் எங்குமே அடிபடவில்லை, எந்த படமும் இவர் இசையமைக்கவும் இல்லை.
கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு தாவிய பிரபல இசையமைப்பாளர்..
இதற்கான காரணம் நிறைய இருக்கின்றன. அனிருத், சாய் அபயங்கார் போன்ற புது புது இசையமைபாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். மக்களின் எதிர்பார்ப்பும் மாறிவிட்டது என சொல்லிக்கொண்டே செல்லலாம்.
தற்போது இவர் திடீரெனெ கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு தாவி விட்டார். காரணம் என்னவென்று பார்க்கப்போனால் தமிழ் சினிமாவில் இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை, வாரிசு அடிப்படையில் கூட இசையமைப்பாளர்களை இறக்குகிறார்களாம். அதுமட்டுமல்லாமல் சாதி, மதம் பார்த்து வாய்ப்பளிக்கிறார்களாம்.
அதனாலதான் தான் “சாம் CS” கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று விட்டார் எனவும் “அரசல் புரசலாக” பேசிக்கொள்கிறார்களாம். சினிமாவில் தான் இந்த பிரச்சினை இல்லை என்று பார்த்தால் சில நாட்களாக ஆங்காங்கே சில பிரபலங்கள் இதே கருத்தை முன்வைக்கிறார்கள்.
ஒருவேளை இதெல்லாம் உண்மையாக இருக்குமோ என நம்ப வைக்கும் விதத்தில் உள்ளது தற்போது வரும் தகவல்கள். அனைத்து துறைகளையும் நாசமாக்கிய சாதி,மதம். இப்போது சினிமா துறையிலும் காலடி பதித்துள்ளது போல.