ஓ ஜி மெட்டீரியலாக மாறிய லெஜன்ட் அண்ணாச்சி.. பட்டி டிங்கரிங் பலமாய் பார்த்த டாக்டர் சரவணன்

2022 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானவர் தொழிலதிபர் சரவணன் அண்ணாச்சி. பிசினஸ்மேனாக இருந்தவர் திடீரென சினிமா பக்கம் தலை காட்டினார்.பிரபல விளம்பர பட கலைஞர்களான ஜெ டி ஜெர்ரி இயக்கத்தில் “தி லெஜன்ட்” படத்தில் ஹீரோவாக நடித்தார்.

ஆரம்பத்தில் ஹீரோ மெட்டீரியலாக இவரை மக்கள் ஏற்றுக் கொள்வாரா என்கிற கேள்வி இருந்தது, படத்தின் கதை அருமையாக இருந்தாலும் இவருக்கு அந்த அளவுக்கு நடிக்க தெரியவில்லை என மக்கள் விமர்சனம் கொடுத்திருந்தனர். நடிப்பை பற்றி சிலவற்றை தெரிந்து கொண்டால் இவர் ஜெயிப்பார் என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டது.

முதல் படத்தில் இவருக்கு ஆக்சன் கை கொடுத்தது. நடிப்பில் சில தவறுகளை செய்தாலும் அடிதடி சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்பினார். பிரபு, நாசர், யோகி பாபு, விவேக் என ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாலும் அந்த படத்தில் இருந்தார்கள். வழக்கமான மசாலா கதை இல்லாமல் இவருக்கு தகுந்த கதையாக அமைந்திருந்தார்கள் இயக்குனர்களாகிய ஜெ டி ஜெர்ரி.

அந்த படத்திற்குப் பிறகு இப்பொழுது மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் சரவணன். துரை செந்தில்குமார் இயக்கத்தில் இப்பொழுது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த படத்தில் சில நடிப்பு நுணுக்கங்களை பயின்றுள்ளார் சரவணன் அருள். பாதி படபிடிப்பு முடிந்ததை போட்டு பார்த்தவர்கள் மிரண்டு விட்டார்களாம். நடிப்பில் சரவணன் அருள்அசத்தி இருக்கிறாராம். பழைய படத்தில் உள்ள தவறுகளை இதில் திருத்தி அவரை ஒரிஜினல் நடிகராக மாற்றி உள்ளனர்.