Sasikumar : டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கிறது ஃப்ரீடம் படம். அகதிகளாக வந்து என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் காட்டியது.
அதே கதை களத்துடன் கொஞ்சம் சீரியஸான கோணத்தில் வெளியாகி இருக்கிறது ஃப்ரீடம். சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் ஆயிரம் அகதிகளை கைது செய்த சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களை அடித்து துன்புறுத்துகிறார்கள். இங்கேயே இருந்தால் செத்து மடிந்து விடுவோம் என்று தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.
சசிகுமாரின் ஃப்ரீடம் பட விமர்சனம்
அவர்கள் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைகிறார்களா என்பது தான் பிரீடம் படத்தின் கதை. உண்மை கதையை மையமாக எடுத்தாலும் படத்திற்காக சில காட்சிகள் மாற்றப்பட்டு இருக்கிறது. படத்தில் சசிகுமாரின் நடிப்பு மிகவும் பக்கபலமாக இருக்கிறது.
அதேபோல் லிஜோமோல் ஜோஸின் நடிப்பு ஜெய் பீம் செங்கேனியை நினைவுபடுத்துகிறது. ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரானின் இசை எல்லாமே அற்புதமாக அமைந்துள்ளது. குறிப்பாக நான் கர்ணன் அல்ல, நீங்கதான் என்று பேசும் வசனம் கைதட்டல் பெறுகிறது.
மேலும் சிறையில் அகதிகள் படும் அவஸ்தைகளை மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும், அழுத்தமாகவும் இயக்குனர் கொடுத்துள்ளதற்கு பாராட்ட வேண்டும். படத்திற்கு மைனஸ் என்றால் போலீஸ் விசாரணை மற்றும் சில காட்சிகள் மெதுவாக நகர்ந்து செல்கிறது.
உண்மை கதையாக இருந்தாலும் டூரிஸ்ட் ஃபேமிலி போன்று வணிக ரீதியாக ஃப்ரீடம் படம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் பலருக்கும் தெரியாத உண்மை சம்பவத்தை இயக்குனர் கொடுத்துள்ளதற்காக கண்டிப்பாக ப்ரீடம் படத்தை பார்க்க வேண்டும்.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5