ஈசிஆரில் சொகுசு பங்களா, காஸ்ட்லி கார்.. ப்ரியா பவானி சங்கரின் பெரிய இடத்து ரகசியம்

Actress Priya Bhavani Sankar: சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வருபவர்கள் எல்லாரும் முன்னணி அந்தஸ்தை அடைவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த ஜாக்பாட் அடிக்கிறது. அப்படி சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து கிடுகிடுவென உயர்ந்திருக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.

தற்போது அவருடைய கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. அதில் நாக சைத்தன்யாவுடன் அவர் இணைந்து நடித்த தெலுங்கு வெப் சீரிஸும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பயில்வான் ரங்கநாதன் இவர் குறித்து வெளியிட்டு இருக்கும் ஒரு விஷயம் பகீர் கிளப்பியுள்ளது.

எப்போதுமே நடிகைகளை பற்றி பல சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர் ப்ரியா பவானி சங்கரையும் விட்டு வைக்கவில்லை. அதன்படி குறுகிய காலத்திலேயே இவர் முன்னணி நடிகையாக உயர்ந்ததற்கு பின்னால் ஒரு பெரும் புள்ளி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது அறிமுக இயக்குனர் ஒருவர் தயாரிப்பாளரிடம் வாய்ப்புக்காக சென்றிருக்கிறார். அந்த தயாரிப்பாளர் ப்ரியா பவானி சங்கரின் கால்ஷீட்டை வாங்க சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த இயக்குனருக்கு அது குதிரைக்கொம்பாக இருந்திருக்கிறது.

அதன் பிறகு ப்ரியாவுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் உதவியுடன் கால்ஷீட் கிடைத்திருக்கிறது. அதேபோன்று பிரபல பைனான்சியர் ஒருவரும் இவருக்கு நெருக்கமாக இருக்கிறாராம். ப்ரியா என்ன சொன்னாலும் அந்த பைனான்சியர் தட்டாமல் செய்து விடுவாராம்.

அதனாலேயே 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் போதே ஈசிஆரில் சொகுசு பங்களா, காஸ்ட்லி கார் என அவர் வலம் வருகிறார். எல்லாம் இந்த பெரிய இடத்து சகவாசம் தான். ஆனால் அதெல்லாம் நமக்கு எதுக்கு என பயில்வான் போற போக்கில் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.