அவதாரை மிஞ்சும் வேள்பாரி.. ஷங்கரின் கனவு படத்தை தயாரிக்க போவது யார்.?

Shankar-Velpari: பொன்னியின் செல்வன் எப்படி மணிரத்தினத்திற்கு ஒரு கனவு படமாக இருந்ததோ அப்படித்தான் ஷங்கருக்கு வேள்பாரி. எழுத்தாளர் வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி பொன்னியின் செல்வன் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த புத்தகமாகும்.

தற்போது இந்த புத்தகம் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானதை அடுத்து ஒரு விழா நடத்தப்பட்டுள்ளது. அதில் ரஜினி, ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது பேசிய சங்கர் தன் கனவு படம் குறித்து பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.

என்னுடைய முதல் கனவு படமாக இருந்தது எந்திரன். அதை அடுத்து வேள்பாரி இப்போது என்னுடைய கனவாக இருக்கிறது. நம் தமிழ் சினிமாவை பொருத்தவரையில் அந்த காலகட்டத்தில் வெளிவந்த சந்திரலேகா படம் போல் ஒரு பிரம்மாண்டம் இல்லை என்று சொல்வார்கள்.

அவதாரை மிஞ்ச தயாராகும் வேள்பாரி

உண்மையில் அந்த படம் போல் ஏன் அதை மிஞ்சும் அளவுக்கு வேள்பாரி நிச்சயம் இருக்கும். ஒரு வேளை சந்திரலேகா படத்தை தயாரித்த எஸ் எஸ் வாசன் இப்போது இருந்திருந்தால் இந்த படத்தை நிச்சயம் தயாரித்து இருப்பார்.

ஏனென்றால் இந்த படத்தில் அவ்வளவு சிறப்பான அம்சங்கள் இருக்கிறது. போட்டோகிராபி ஆர்ட் டைரக்ஷன் சண்டைக் காட்சிகள் வசனங்கள் காஸ்டியூம்ஸ் என பல விஷயங்கள் இருக்கிறது.

சொல்லப்போனால் அவதார் படம் எப்படி உலகம் போற்றும் படி இருந்ததோ அப்படி இருக்கும். வேள்பாரி இந்திய சினிமாவிற்கு ஒரு பெருமைமிக்க படமாக இருக்கும். இப்படிப்பட்ட என்னுடைய கனவு படம் விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். இப்படியாக சங்கர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இந்த பிரம்மாண்ட படைப்பை தயாரிப்பதற்கு எந்த தயாரிப்பாளர் வருவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இப்போது எல்லாம் கமர்சியல் படங்களை தான் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள்.

வரலாற்று படத்தை எடுத்து நஷ்டமானால் என்ன செய்வது என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. அதனாலேயே சங்கரின் கனவு படம் இன்னும் நனவாகாமல் இருக்கிறது. விரைவில் அவருடைய கனவை நிறைவேற்ற தயாரிப்பாளர் வருவார் என நம்புவோம்.