Shankar : இயக்குனர் ஷங்கர் அவர்கள் தமிழ் சினிமாவில் நீங்க முடியாத இடத்தில் உள்ள ஒரு இயக்குனர். இவர் ஆரம்பகால கட்டத்திலிருந்து இன்றுவரை இவர் எடுத்த அனைத்து படங்களும் மாபெரும் ஹிட் கொடுத்தவை. இவர் தற்போது அளித்திருந்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பின்பற்றி வரும் LCU டெக்னிக்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆரம்பத்திலேயே அந்த டெக்னிக்கை கையில் எடுத்த ஷங்கர்..
இந்த டெக்னிக்கை நான் முன்னதாகவே யோசித்தேன், ஆனால் நான் செயல்படுத்தவில்லை அதுதான் நான் செய்த தவறு என ஷங்கர் மனம் வருந்தி கூறியுள்ளார்.
அதாவது இவர் லோகேஷ் போல தனக்கென ஒரு யூனிவெர்சை உருவாக்குவதாக இருந்தாராம். ஆமாம் இவர் இந்தியன், அந்நியன், ரஜினி நடித்த சிவாஜி படத்தை வைத்து ஒரு யூனிவெர்சை தயாரிக்க போவதாக இருந்தாராம்.
இந்த ஐடியாவை சிலரிடம் தெரிவித்தாராம், ஆனால் அந்த சிலர் இவரை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றார்களாம். மேலும் இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுன்னு சொல்லி மூளைசலவை செஞ்சி விட்டார்களாம். அதனால் இவர் இந்த திட்டம் சரியில்லைனு விட்டுவிட்டாராம்.
நான் தவறு செய்து விட்டேன், யூனிவெர்சை நான் அப்பவே செய்திருக்கலாம் என்று வருத்தபடுகிறார். இல்லையென்றால் ஷங்கர் சினிமெட்டிக் யூனிவெர்ஸ் உருவாக்கியிருப்பாராம்.
இன்று இந்த டெக்னிக்கை லோகேஷ் கனகராஜ் இன்று செய்து வருகிறார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை பார்த்து இன்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன் எனவும் சிலரது பேச்சை கேட்டு அந்த முடிவை கைவிட்டுவிட்டேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இவர் கூறியிருப்பது போல ஒருவேளை இந்த படங்களை வைத்து ஒரு படம் தயாரித்திருந்தால் எப்படி இருந்திருக்கும். இந்த மூன்று படங்களுமே மாஸ் படங்கள். அப்போ கண்டிப்பா இது நல்ல ரீச் ஆயிருக்கும் மிஸ் பண்ணிடீங்களே ஷங்கர் சார் என திரை வட்டாரத்தில் வருத்தபடுகிறார்களாம்.