உலகை மாற்றும் சங்கரின் கனவு.. ரஜினிக்கு அதிர்ச்சி கிளப்பிய பேச்சு

Director : தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட இயக்குனர் யார் என்று கேட்டால் அது சங்கர் தான். முதலில் ஜென்டில்மேன் படத்தில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். பிரம்மாண்டமான இயக்குனர் என்று ஒரே போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து காதலன், இந்தியன் போன்ற படங்களையும் அதன் பின் முத்து, ஜீன்ஸ், பாய்ஸ், அந்நியன் போன்ற ஹிட் திரைப்படங்களையும் கொடுத்தார். இப்படி ஒரு இயக்குனரா என்று படம் பார்க்கும் ரசிகர்கள் மிரண்டு போகும் அளவிற்கு, இவருடைய இயக்கம் இருந்துள்ளது.

இந்தப் படங்களை பார்த்து, மிரண்டு போன மக்களுக்கு இன்னும் கொஞ்சம் வளர்ச்சி பெற்று 2010ல் எந்திரன் திரைப்படத்தை இயக்கி ஷாக் கொடுத்தார். ரஜினி ரோபோவாக சித்தரித்த ஒரு புது முயற்சி தொடங்கிய சங்கருக்கு திரை உலக மட்டுமின்றி அனைவரது வரவேற்பும் கிடைத்தது.

எந்திரன் திரைப்படம் அவரை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு சென்றது. தனது இரண்டாவது மகள் அதித்தியும் “விருமன்” திரைப்படத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். மருத்துவராக இருந்தாலும் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் என்பதை நிரூபித்திருக்கிறார் அதிதீ.

சினிமாவில் ஹிட்டாக முடியவில்லை என்றால் திரும்பவும் மருத்துவத்தை தொடர வேண்டும் என்பது சங்கர், மகளுக்கு போட்ட கட்டளை. இதை பார்த்த ரசிகர்கள் “நீங்க சினிமாவில் பிரம்மாண்டம் ஆனால் உங்கள் மகள் அப்படி இல்லையே சங்கர் சார்” என்று பதிவிட்டு வந்தனர்.

சங்கரின் கனவு நிறைவேறுமா?

“என்னுடைய முதல் கனவு திட்டம் எந்திரன் திரைப்படம் அதை வெற்றிகரமாக முடித்து விட்டேன். தற்போது வேல்பாரி திரைப்படம் என் கனவாக மாறியிருக்கிறது. இந்தப் படம் கேம் ஆப் த்ரோன்ஸ் மற்றும் அவதார் போன்ற உலக அங்கீகாரம் படங்களாக மாறும் என்பதில் ஐயமில்லை. என்னுடைய இந்த வேல்பாரி படக் கனவு நினைவாகும் என்று நம்புகிறேன்- இயக்குனர் சங்கர்”.