பிகு பண்ணிய நடிகை, கூலாக தயாரிப்பாளர்களுக்கு தூது விடும் சுல்தானா.. என்ன சிம்ரன் இதெல்லாம்?

Simran: அண்ணன் எப்போ எந்திரிப்பான் திண்ணை எப்போது காலியாகும் என ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் நடிகை சிம்ரனுக்கு காத்திருக்காமலேயே நல்ல காலம் கனிந்து வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

90களின் காலகட்டத்தில் தன்னுடைய கட்டுக்கோப்பான உடல், நடனத்தின் மூலம் கிரங்கடித்த சிம்ரன் தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் உணர்ச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் சமீபத்தில் தன்னுடைய சககால நடிகை ஒருவர் சிம்ரன் ஆன்ட்டி ரோல் பண்ணுவதாக பேசியது குறித்து ஆதங்கத்தையும் தெரிவித்து இருந்தார்.

என்ன சிம்ரன் இதெல்லாம்?

கண்டிப்பாக சிம்ரனை அப்படி பேசியது ஜோதிகா தான் என்றும் பேசப்பட்டது. இதற்கு காரணம் சிம்ரன் மற்றும் ஜோதிகா இருவரும் சமகாலத்து போட்டியாளர்கள்.

இரண்டாவது இன்னிங்ஸ் சென்று வரும்போது ஜோதிகா சிம்ரனை தட்டி தூக்கி விட்டார். ஆனால் திடீரென தமிழ் சினிமாவை எனக்கு வேண்டாம் என பேசி வருகிறார்.

இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் பல முன்னணி நடிகர்கள் ஜோதிகா மீது மன வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் சிம்ரனுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

90களில் போட்ட போட்டி பத்தாது என்று 20 வருடங்கள் கழித்து மீண்டும் ஜோதிகாவுடன் போட்டி போட சிம்ரன் தயாராகி கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.