மகன் சூர்யாவுக்கு வில்லனான சிவக்குமார்.. சூர்யா எடுத்த ஓட்டம்

Surya : சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூர்யா. தற்போது அப்பாவான சிவகுமார், மகன் சூர்யாவுக்கு வில்லனாக மாறி இருக்கிறார். இந்த செய்தி தற்போது வலைதளத்தில் பெரிய வைரலாகி இருக்கிறது.

ஒரு காலத்தில் இவரது திரைப்படம் தியேட்டருக்கு வந்தாலே ஹிட் தான். ஆனால் இப்போது சில தொடர் படங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும் ரெட்ரோ திரைப்படத்தில் மீண்டும் சுமார் ஹிட் கொடுத்தார் என்பதில் ஐயமில்லை.

இன்னொரு பையன் எங்கே!

சினிமாவில் மூத்த நடிகரான சிவகுமார் தனது நடிப்பு திறமையால், நல்ல பெயரை சம்பாதித்தார். அதன் பிறகு தன் மூத்த மகனான சூர்யாவை சினிமாவில் நடிக்க வைத்தார்.

சூர்யா சினிமாவில் பயங்கர ஹிட் கொடுத்தபோது, இன்னொரு பையன் எங்கே என்று எல்லாரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும்போது, பருத்திவீரன் திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி மாஸ் என்ட்ரி கொடுத்தார் கார்த்தி. அப்போது அண்ணன் தம்பி இருவருமே போட்டி போட்டு நடித்துக் கொண்டு வருகின்றனர்.

வில்லனாக மாறிய சிவகுமார்..

தற்போது பேட்டியில் நடிகர் கார்த்தி தனது அப்பா சிவகுமார் மற்றும் சூரியாவை பற்றி பேட்டியில் பேசியது ட்ரெண்டிங்காகி வருகிறது. கார்த்தி கூறியதாவது “எங்க அப்பா சூர்யா அண்ணனுக்கு பெரிய வில்லனாக இருந்திருக்காரு. சினிமாவுக்கு செக்கெண்ட் ஷோ போயிட்டு லேட்டா வந்தா திட்டுவாரு .

அப்பா கிட்ட திட்டு வாங்கும்போது எங்க அண்ணன் அப்படியே மேல பாத்துகிட்டு இருப்பார் அண்ணனை நான் தான் போட்டுக் கொடுப்பேன்-கார்த்தி“. என்று நடிகர் கார்த்தி தன் அண்ணன் சூர்யாவைப் பற்றி காமெடியாக பகிர்ந்துள்ளார்.