யோகி பாபு, சூரி, சந்தானத்தின் சம்பள விவரம்.. உண்மையில் ஹீரோவாக ஜெயித்தது இவர்தான்

யோகி பாபு, சூரி, இருவரும் காமெடி, ஹீரோ குணச்சித்திரம் இதில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஏற்று நடித்து வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக சந்தானம் ஹீரோ கதாபாத்திரம் மட்டுமே பண்ணி வருகிறார். இப்பொழுது மீண்டும் காமெடியில் இறங்கப் போவதாக பேச்சுவார்த்தைகள் அடிபடுகிறது.

சந்தானம் இதுவரை 13 படங்கள் ஹீரோவாக நடித்துள்ளார். எல்லாமே காமெடி கலந்த கதைக்களம் தான். ஆனால் அதில் ஒன்று இரண்டு படங்கள் மட்டும் தான் கை கொடுத்தது, மீதமுள்ள படங்கள் எல்லாம் அவருக்கு மந்தமாய் போனது. ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் 5 கோடிகள் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

யோகி பாபு, மண்டேலா படத்தின் மூலம் தன்னை ஒரு ஹீரோவாக நிரூபித்துக் காட்டினார். அதிலிருந்து அவரும் காமெடி கதாபாத்திரம் பண்ணினால் கூட, வருடத்திற்கு ஓரிரண்டு படங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். யோகி பாபு ஒரு படத்திற்கு காமெடியனாகவோ, ஹீரோவாகவோ நடிப்பதற்கு 5 கோடிகள் வாங்குகிறார்.

சூரி இதுவரை ஆறு படங்கள் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதில் ஐந்து படங்கள் சூப்பர் ஹிட். காமெடி கதாபாத்திரம் தான் இவரது டார்கெட் ஆனால் ஹீரோ வாய்ப்பு வந்தால் அதையும் விடுவதில்லை. இவர் ஒரு படத்திற்கு ஹீரோவாக நடிப்பதற்கு எட்டு கோடிகள் சம்பளம் வாங்குகிறார்.

யோகி பாபு, சந்தானத்திற்கு அப்புறம் வந்தவர் தான் சூரி. வெற்றிமாறனின் விடுதலைப் படம் தான் அவருக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்து தூக்கி விட்டது. அவர்கள் இருவரை காட்டிலும் இவர்தான் இப்பொழுது முதல் இடத்தில் இருக்கிறார். இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →