ஒரு வழியா உடும்பு பிடியை விட்ட அல்லு அர்ஜுன்.. ரெட்டு போய் கிடைத்த கிரீன் சிக்னலால் டபுள் ஹேப்பியில் அட்லீ, சன் பிக்சர்ஸ்

அட்லி, அல்லு அர்ஜுனனை வைத்து இயக்கும் படம் கூடிய விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ஆரம்பத்தில் பல முட்டுக்கட்டைகளை போட்டது. இந்த படத்திற்கு இவ்வளவு தான் பட்ஜெட் என நிர்ணயித்த போதிலும் அட்லி ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் இந்த ப்ராஜெக்ட் இழுபறியில் இருந்தது.

அதுமட்டுமில்லாமல் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம் சன் பிக்சர்ஸ்சை ஆட்டம் காண செய்தது. அட்லி இந்த படத்தை இயக்குவதற்கு 100 கோடிகளும், அல்லு அர்ஜுன் இந்த படத்தில் நடிப்பதற்கு 250 கோடிகளும் சம்பளமாக கேட்டனர். இதனால் பலத்த யோசனையில் இருந்தது கலாநிதி மாறன் தரப்பு

அதன் பின்னர் புஷ்பா 2 கொடுத்த 1200 கோடி கலெக்ஷனை பார்த்த சன் பிக்சர்ஸ் இந்த ப்ராஜெக்ட்டுக்கு பச்சை கொடி காட்டியது. இந்தப் படத்திற்கு ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா தான் வேண்டுமென அட்லியும், அல்லு அர்ஜுனும் உறுதியாக இருந்தனர்.

பிரியங்கா சோப்ரா பாலிவுட் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதனால் இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் அவர்தான் வேண்டும் என காத்துக் கிடந்தனர். இப்பொழுது அவர் ராஜமவுலி படத்தில் நடித்துக் கொண்டு இருப்பதால் கால அவகாசம் எடுக்கும் என வேறு ஹீரோயின்கள் பக்கம் சென்று விட்டனர்.

இந்த படத்தில் அல்லு அர்ஜுன் இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார். அதனால் ஒரு ஹீரோயினாக மெர்னால் தாக்கூர் கமிட்டாகி இருக்கிறார். மாறாக இன்னொரு அல்லு அர்ஜுனுக்கு, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். ஒரு வழியாக ஹீரோயின் கிடைத்ததால் அட்லி மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்பு வேகம் எடுக்கிறது.