கூலி பிசினஸ் ஆயிரம் கோடியா.? சன் பிக்சர்ஸ் போட்ட கணக்கு வேற!

Coolie : கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி படம் உருவாகி வருகிறது. இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இப்போதே படத்தில் பிசினஸ் பல கோடி வியாபாரம் ஆகி இருக்கிறது.

அதுவும் ஓடிடி உரிமை 70 கோடியை தாண்டி விற்றுள்ளனர். மேலும் டிஜிட்டல் உரிமையை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் சன் நெட்வொர்க் பெற்றுள்ளது. இந்த சூழலில் ஆயிரம் கோடி கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் சன் பிக்சர்ஸ் 1200 கோடிக்கு திட்டம் போட்டு இருக்கிறது.

அதாவது படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் கூலி படத்தின் பிசினஸை அதிகரிக்க தான் இப்போது பாலிவுட் நடிகரான அமீர் கானை இணைத்து இருக்கிறார்கள்.

கூலி படத்திற்கு சன் பிக்சர்ஸ் போட்ட திட்டம்

அதுமட்டுமல்லாமல் அமீர்கானே கூலி படத்திற்கான ப்ரமோஷன் செய்து வருகிறார். இதுவே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகமாகி இருக்கிறது. மற்றொருபுறம் 200 நாடுகளில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஸ்கிரீன்கள் படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர்.

ஆகையால் படத்தின் பிசினஸ் படு பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக லோகேஷின் முந்தைய படமான லியோ கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் லோகேஷ் அந்த நெகட்டிவ் விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டார்.

ரஜினியின் படத்தை எடுக்க வேண்டும் என்பது அவருடைய கனவு. ஆகையால் நிச்சயம் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் படியாக கூலி படத்தை எடுத்து இருப்பார். படம் தாறுமாறாக இருந்தால் சன் பிக்சர்ஸ் அசால்டாக 1200 கோடி முதல் 1500 கோடி வசூலை அடிக்கும்.