கரை சேருமா வின்னர் கூட்டணி.. சுந்தர் சி-வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் முழு திரை அலசல் இதோ!

Gangers: சுந்தர் சி வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் நேற்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு வந்த வின்னர் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

வின்னர் அளவுக்கு இல்லை என்றாலும் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பாதி அளவு பூர்த்தி செய்ததா என்று கேட்டால் அது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கேங்கர்ஸ் முழு திரை அலசல்

வடிவேலுவின் காமெடியில் மொத்தமாக எல்லாமே மிஸ் ஆகிறது. படம் முழுக்க வடிவேலு வரும் காமெடி காட்சிகள் தேவையில்லாத ஆணிகளாகவே இருக்கிறது.

சுந்தர் சி படம் என்றால் லாஜிக் இல்லை என்றாலும் வயிறு குலுங்க சிரிக்கலாம் என்றுதான் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் குவியும்.

ஆனால் இந்த படத்தில் மறந்தும் சிரிக்கும் அளவுக்கு எந்த ஒரு காட்சியும் இல்லை. நான்கைந்து ஹீரோயின்கள் என படம் கலகலப்பாகவும் சுந்தர் சி பாணியில் இல்லை.

இரண்டாவது பாதியில் இருக்கும் ட்விஸ்ட் மற்றும் கிளைமேக்ஸ் காட்சி மட்டும் தான் படத்தில் உருப்படியான விஷயங்கள். மேலும் படத்தின் பாடல்களும் மனதில் நிற்கும் அளவுக்கு இல்லை.

மொத்தத்தில் வடிவேலுவை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து சுந்தர் சி எடுத்தது போல் தான் இந்த படம் இருக்கிறது.

வழக்கமான சுந்தர்சியின் படத்தில் இருக்கும் மசாலாக்களும் இல்லை, வடிவேலுவின் நகைச்சுவையும் இல்லை.