100 கோடியை சுழித்து வாயடைத்த சுந்தர் சி.. ஒர்த் வர்மா ஒர்த்துன்னு மிரண்ட ஐசரி கணேஷ்

மூக்குத்தி அம்மன் முதல் பாகம் வெறும் 45 கோடிகளில் எடுக்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு நயன்தாரா சம்பளம் மட்டும் தான் பெரும் தொகை, மற்றபடி படத்தின் தயாரிப்பு செலவுகள் தான். இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் ரெடி ஆகி வருகிறது. இதனை சுந்தர் சி இயக்கிக் கொண்டிருக்கிறார்.

பொள்ளாச்சி ஷெட்யூல்களை எல்லாம் திருப்திகரமாக முடித்துவிட்டார். இப்பொழுது அதன் கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வருகிறாராம். ஆரம்பத்தில் இதற்கு பல இடையூறுகள் செய்து வந்த நயன்தாரா இப்பொழுது எந்தவித சலசலப்பும் இன்றி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 100 கோடிகள். முதல் பாகத்தை விட இது டபுள் மடங்கு இருக்கிறது. சாமி படத்திற்கு ஏன் இவ்வளவு செலவு என இதற்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஐசரி கணேசின் வேல்ஸ் நிறுவனம் இதை தயாரித்து வருகிறது.

இப்பொழுது மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தவரை ஒரு ப்ரோமோ ரெடி பண்ணி உள்ளார் இயக்குனர் சுந்தர் சி. அதை தயாரிப்பாளர் ஐ சரி கணேஷ் உள்ளிட்டவர்களுக்கு போட்டு காண்பித்துள்ளார். பார்த்த அவரது டீம் மிரண்டு விட்டதாம். இப்பொழுதே படம் சூப்பர் ஹிட் என கூறி வருகிறார்களாம்,

100 கோடிகளுக்கு இந்த படம் ஒர்த்தா என்ற கேள்விகளுக்கு எல்லாம் இப்பொழுது சுந்தர்சி பதிலடி கொடுத்துள்ளார். மார்ச் மாதம் ஆரம்பித்த இந்த படம் இப்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 2026 பொங்கல் பண்டிகைக்கு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர் சி சம்பளம் மற்றும் இதற்கு 20 கோடிகளாம்.