விஜயகாந்துக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சூர்யா.. எந்த படம் தெரியுமா.?

Vijayakanth : விஜயகாந்த் எப்படிப்பட்ட மனிதநேயம் கொண்டவர் என்பதை பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஜெயித்து காட்டியவர் தான் கேப்டன். அவர் நடிக்க இருந்த கதையில் சூர்யா நடித்து ஹிட் அடித்து இருக்கிறார்.

அதாவது ரமேஷ் கண்ணா மற்றும் விவேக் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். அந்த சமயத்தில் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் கண்ணா ஒரு கதையை எழுதி இருக்கிறார். அதை விவேக்கின் வற்புறுத்தலின் பெயரில் தயாரிப்பாளர் ராவுத்தரிடம் சொன்னவுடன் மிகவும் பிடித்த போய்விட்டதாம்.

இந்த கதையில் விஜயகாந்த்தான் நடிக்க வேண்டும் என்று உடனே அவருக்கு ஃபோன் செய்தாராம். அப்போது இரண்டு மூன்று படங்கள் இருப்பதாக விஜய்காந்த் மறுத்த நிலையில் நீதான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ராவுத்தர் கூறிவிட்டாராம். விஜயகாந்த்தும் சம்மதம் தெரிவித்ததால் ரமேஷ் கண்ணாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

விஜயகாந்த் கதையில் நடித்த சூர்யா

அப்போது விஜயகாந்த் தர்ம சக்கரம் படப்பிடிப்பில் இருந்தபோது நேரடியாகவே ரமேஷ் கண்ணா சந்தித்துள்ளார். கேப்டன் கதையை கூட கேட்கவில்லையாம், ராவுத்தர் சொன்னால் ஓகேதான் படத்திற்கான வேலையை ஆரம்பித்து விடுங்கள் என்று கூறிவிட்டாராம். அவரும் அதற்கான வேலையில் இறங்கி விட்டாராம்.

ஆனால் அப்போது பல படங்களில் நடிக்க வேண்டி வந்ததால் இந்த படத்தை ரமேஷ் கண்ணாவால் எடுக்க முடியாமல் போய்விட்டது. இந்த சூழலில் தொடர் தோல்விகளை சூர்யா கொடுத்து வந்த நிலையில் ரெட் ஜெயண்ட் அவரை வைத்து படம் எடுக்க முன் வந்தனர். அந்த சமயத்தில் கதை இல்லாத நேரத்தில் ரமேஷ் கண்ணா கே எஸ் ரவிக்குமாரிடம் இந்த கதையை வைத்து படத்தை எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அப்படி உருவான படம் தான் ஆதவன். இந்த படம் சூர்யாவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. மேலும் அந்த கதை பத்து வருடங்களுக்குப் பின்பு படமாக்கப்பட்டாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆதவன் கதையில் விஜயகாந்த் நடித்திருந்தாலும் அற்புதமாக இருந்திருக்கும்.