சூர்யா அப்பா சொல் தட்டாத வளர்ப்பு பிள்ளை. நிஜத்திலும் நான் ஹீரோ தான் என அகரம் பவுண்டேசன் ஆரம்பித்து பல ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கொடுத்து வருகிறார். வருகிற 23ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் வருகிறது. இது அவருக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன ஒன்றாகும்.
1975 ஆம் ஆண்டு பிறந்த சூர்யா தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். 28ஆண்டு காலம் சினிமாவிலும் சாதித்து வருகிறார். 1997ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சர்ச்சைகளில் சிக்காத நடிகராய் இன்று வரை இருக்கிறார்.
இவர் தன்னுடைய 50வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகிறார். வருகிற 19 மற்றும் 20ஆம் தேதி 48 மணி நேரம் இவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தை கோவாவில் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.
இப்பொழுது சூர்யா மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அங்கே அவருடைய நண்பர்கள் வட்டாரத்தை அழைத்து கோவாவில் பிறந்த நாள் பார்ட்டி வைக்கிறார். அதுவும் போக சென்னை ECR இல் இப்போது வீடுகட்டியுள்ளார். அங்கே சென்னையில் உள்ள அவரது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க உள்ளார்.
சூர்யா வரலாற்றை எடுத்து பார்த்தால் இப்படி எல்லாம் அவர் நடந்து கொண்டதே இல்லை. இப்பொழுது புதிதாய் இந்த கேளிக்கை விருந்துகள் எல்லாம் கொடுத்து வருகிறார். இதெல்லாம் மும்பை கலாச்சாரம். சிவக்குமார் எப்படி இதற்கெல்லாம் அனுமதித்தார் என்று தெரியவில்லை. சூர்யாவின் டிராக்கில் இது புதிதாக இருக்கிறது.