Actress Tamannah: அண்மை காலமாகவே தமன்னா பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்துமே சர்ச்சையாக தான் இருக்கிறது. அதிலும் தமிழில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த இவர் ஹிந்தி பக்கம் போய் ரொம்பவே அலப்பறை கொடுக்கிறார் என்ற ரேஞ்சுக்கு கருத்துக்கள் எழுகிறது.
அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் இவர் நடித்திருந்த வெப் சீரிஸ் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதில் கண் கூச வைக்கும் அந்தரங்க காட்சி மற்றும் முகம் சுளிக்க வைக்கும் வசனங்களை பேசி இருந்த தமன்னாவை திட்டாத ரசிகர்களே கிடையாது.
அது மட்டும் இன்றி லஸ்ட் ஸ்டோரீஸ் 2-விலும் இவர் எல்லை மீறி நடித்திருந்தது கண்டனத்திற்கு ஆளாகியது. இப்படி எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்புகளால் தமன்னா பதறிப் போய் ஒரு விளக்கமும் கொடுத்தார். அதாவது கதைக்கு தேவையான பட்சத்தில் தான் நான் அப்படி நடித்தேன் என்று சப்பை கட்டு கட்டினார்.
ஆனால் அதை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. இந்த நிலையில் இப்படத்திற்காக தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது அந்தரங்க காட்சிகளில் நடிப்பதற்கு மட்டுமே இவர் எக்ஸ்ட்ராவாக 2 கோடி வாங்கி இருக்கிறாராம்.
அந்த வகையில் வழக்கமாக 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2-ல் நடித்ததற்காக 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். இதுதான் இப்போது அடுத்த சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. கதைக்கு முக்கியத்துவம் என்று கூறிவிட்டு எக்ஸ்ட்ராவாக சம்பளம் வாங்கி இருப்பது விமர்சனமாகி உள்ளது.
அப்படி என்றால் இனி இதுபோன்ற படுக்கையறை காட்சிகளுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து கல்லா கட்டிவிடுவார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி சர்ச்சை ராணியாக மாறி இருக்கும் இந்த மில்க் பியூட்டி ஜெயிலர் படத்தில் எந்த மாதிரியான கேரக்டரில் நடித்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.