பருவத்திலேயே பயிர் செய்திருக்க வேண்டும்.. ரஜினி பட நடிகையை கிண்டல் செய்த பயில்வான்

Rajini – Bayilvan Ranganathan : சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ரஜினி பட நடிகை ஒருவரை கிண்டல் அடித்து வீடியோ போட்டிருக்கிறார். அதாவது ரஜினி பட நடிகை ஒருவர் 49 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். ஆனால் இவ்வளவு காலம் சிங்கிளாக இருந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறாராம்.

மும்பையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தான் நடிகை நக்மா. இவர் ரஜினியின் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான பாட்ஷா படத்தில் நடித்திருந்தார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நக்மா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

இதற்கு காரணம் அவருக்கு முந்தைய வாழ்வில் ஏற்பட்ட காதல் தோல்விகளே என்று கூறப்பட்டிருக்கிறது. நடிகர் சரத்குமார் உடன் நக்மா கிசுகிசுக்கப்பட்டார். கிரிக்கெட் வீரர் ஒருவருடனும் இவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதன்பிறகு சில காரணத்தினால் இருவரும் பிரிந்து விட்டனர்.

Also Read : ரஜினியை நம்புறது வேஸ்ட்.. விஜய்யின் அரசியல் என்ட்ரியால் முக்கிய நடிகருக்கு வலை வீசும் ஆளும் கட்சி

இந்த சூழலில் நக்மா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் அவரது சகோதரிகள் இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டனர். சமீபத்தில் நக்மா நான் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதாவது பருவத்திலேயே பயிர் செய்திருக்க வேண்டும். 49 வயதான நிலையில் இப்போது நக்மாவுக்கு திருமண ஆசை வந்திருக்கிறது. நக்மாவை திருமணம் செய்து கொள்ள பெரிய தொழில் அதிபர்கள் வரமாட்டார்கள். அப்படியே கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நக்கலாக பயில்வான் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

Also Read : நான் தமிழன் இல்லன்னு மீண்டும் நிரூபித்த ரஜினி.. பணத்துக்காக ரெட்டை வேஷம் போடும் சூப்பர் ஸ்டார்