ஏற்கனவே ரஜினி அடித்த அந்தர்பல்டி.. விஜய் அரசியலுக்கு ஆபத்தாய் அமையப்போகும் கூட்டணி

The alliance will be dangerous for Vijay’s politics: சினிமா,அரசியல் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருந்தாலும், முக்கியமான கட்டங்களில் சினிமாவினால் அரசியலும், அரசியல் ஆதிக்கத்தினால் படங்களின் வெளியீடுகளும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் அவர்களது பாணியிலான, திறமையை வெளிப்படுத்தி மக்களின் கோரிக்கைகளை மற்றும் அவர்களுக்கு ஆதரவான வசனங்களை பேசும்போது தன்னை தான் தாக்குகிறார் என்று அரசியல் கட்சிகள் கொடி பிடித்து அவர்களின் படங்களை வெளியிடாமல் தடுப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த அரசியல் பொல்லாப்பு.

முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் வரும் கோபம் என்னவென்றால், எந்த ஆதிக்கத்தினால் தனது படங்களை தடுத்து நிறுத்துகிறாரோ! அதே ஆதிக்கத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே அவர்களது ஆதங்கம்.

இதில் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என பலரும் பாதிக்கப்பட்டவர்களே.

அதில் விஜயகாந்த் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்று முன்னேற, கமல் தோல்வியுற்று தனது கட்சியை தக்க வைத்திருக்கிறார். ரஜினியும் இருபது ஆண்டு காலமாக, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை! தமிழகத்தை காப்பாற்ற நான் இருக்கிறேன்! இதோ வருகிறேன் என்றார்.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளிவந்த சன் பிக்சர்ஸின் அண்ணாத்த திரைப்படத்திற்கு பின், அடிச்சாரு பாருங்க ஒரு அந்தர்பல்டி!

“உடல்நிலை சரியில்லை, வயதாகி விட்டது, நான் அரசியலில் ஈடுபட போவதில்லை!” என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு களத்தில் இருந்து வெளியேறினார் ரஜினி .

இது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. சன் பிக்சர்ஸ் திமுகவின் ஆதிக்கத்தோடு இணைந்தது. அதில் நடித்த பிறகு தான் இவருக்கு இந்த நிலைமை வந்தது. 

அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி போடும் விஜய்

இப்பொழுது அதே போல் தளபதி விஜய்யும் அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் இன் கூட்டணியில் அடுத்த படத்தை தேர்வு செய்து உள்ளார். இது விஜய்யின் அரசியலுக்கு ஆபத்தாய் முடியும் என விஜய்யின் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

எதிர்பாராத அளவு பெரும் மாற்று சக்தியாய் உருவெடுத்து வருகிறார் தளபதி. எங்களுக்கு பயம் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்தாலும், உள்ளூர பயந்து நடுங்கி உள்ளனர் திமுகவினர். 

மாற்றத்தை எதிர்நோக்கும் தமிழக மக்களுக்கு தளபதியின் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும், அதை தவிடு பொடியாக்கும் சூழ்ச்சிகளுடன் சன் பிக்சர்ஸ் இன் கூட்டணியில் தந்திரத்தை அரங்கேற்ற உள்ளது திமுக. விஜய் இதிலிருந்து தப்பிப்பது கடினமே!

2026 தேர்தலில் முதல்வராகும் கனவோடு இருக்கும் தளபதியை, அவர் வாயாலே நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லவும் வைத்து விடும் இந்த அரசியல். ஆதிக்கவாதிகள் ஆட்டி வைப்பதே அரசியல்!