கைவசம் இவ்வளவு படம் இருந்தும் புலம்பும் இசையமைப்பாளர்.. எல்லாம் அனிருத், சாய் பண்ற வேலை

Anirudh: ஏதாவது புது பட அறிவிப்பு வந்தால் ஹீரோ ஹீரோயின் யார் என்று பார்ப்பதற்கு முன் இசையமைப்பாளர் சாய் அபயங்கரா என்று தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அந்த அளவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு பின்னணியில் அட்லி சிம்பு ஆகியோர் இருக்கின்றனர். இவர்களின் சிபாரிசு தான் இந்த லைன் அப்-க்கு காரணம். அதேபோல் பல வருடங்களாக தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் அனிருத்.

பெரிய பட்ஜெட் டாப் ஹீரோக்களின் படங்கள் என்றாலே இவர் நிச்சயம் அதில் இருப்பார். இப்படி இந்த இரண்டு பேரும் தான் இப்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எல்லாம் அனிருத், சாய் பண்ற வேலை

இதில் ஒரு இசையமைப்பாளருக்கு கொஞ்சம் காண்டு இருப்பது போல் தெரிகிறது. அவர் வேறு யாரும் கிடையாது சாம் சிஎஸ் தான். பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர் கையில் தற்போது சர்தார் 2, பிளாக்மெயில், ரெட்ட தல, சலூன், தனுஷ் படம் சிவகார்த்திகேயன் படம் என இருக்கிறது.

ஆனாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இவர்கள் மீது அவருக்கு பொறாமை இருப்பது போல் தெரிகிறது. இதற்கு காரணம் சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் சாய் அபயங்கர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் நல்ல பையன் திறமையான பையன் என பாராட்டும் விதமாக தான் பேசி இருந்தார். ஆனால் பார்ப்பதற்கு ஆதங்கத்தில் புலம்புவது போல் இருக்கிறது. இவருக்கு தான் கையில படம் இருக்கு. அப்புறம் எதுக்கு இவங்க ரெண்டு பேரை பார்த்து காண்டாவுராரு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.