டூரிஸ்ட் ஃபேமிலிக்கு நான்தான் காசு கொடுக்கணும்.. இளையராஜாவுக்கு நோஸ்கட் கொடுத்த மம்பட்டியான்

Tourist Family: கடந்த மாதம் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி ரெட்ரோ படத்துக்கு போட்டியாக வெளியானது. முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

ராஜமவுலியில் தொடங்கி பல பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி தள்ளிவிட்டனர். படத்தில் நாம் ரசிக்கும் படியாக பல காட்சிகள் இருந்தது. ஆனாலும் மலையூரு நாட்டாமை பாடல் வரும் காட்சி வேற லெவல் ஹிட்.

அது பற்றி இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ஏனென்றால் அவர் இயக்கி தயாரித்து பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்தில் தான் இப்பாடல் இருக்கிறது.

இளையராஜாவுக்கு நோஸ்கட் கொடுத்த மம்பட்டியான்

இந்த பாடலை பயன்படுத்தியதற்காக டூரிஸ்ட் ஃபேமிலி தியாகராஜனிடம் பர்மிஷன் கேட்டார்களா என அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்த பாடலை அவர்கள் பயன்படுத்தியது எனக்கு சந்தோஷம்தான்.

மீண்டும் பல கோடி மக்களை இந்த பாடல் சென்றடைந்துள்ளது. படத்தின் வெற்றிக்கு இது ஒரு காரணமாகவும் இருக்கிறது. நிறைய பேர் என்னிடம் உங்ககிட்ட பர்மிஷன் கேட்காம யூஸ் பண்ணிட்டாங்க வழக்கு போடுங்க காசு கேளுங்க என சொன்னாங்க.

ஆனா எனக்கு அதில் விருப்பமில்லை. அப்படி யோசிக்கவும் மாட்டேன். நியாயப்படி பார்த்தால் என் பாடலை மீண்டும் ஹிட் ஆக்கியதற்காக நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது வைரலாகி வரும் நிலையில் இளையராஜாவுக்கு சரியான நோஸ்கட் பெரிய மனுஷன் இப்படி பெருந்தன்மையாத்தான் இருக்கணும் என தியாகராஜனுக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →