Cinema : சினிமா தான் இப்போது நம்மை ஆட்டிப்படைக்கும் தந்திரமே. ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனால் போதும் திரையரங்குகளில் கூட்டம் அப்படி அலைமோதும்.
சாதாரணமாக இருப்பவர்கள் கூட இப்போது ஹீரோ ஆகிறார்கள். அதைவிட இயக்குனர் அளவுக்கே செல்கிறார்கள். சினிமா ஒரு குப்பை என்றும் சொல்லும் அளவுக்கு யார் இதில் இருக்கிறார்கள் யார் யார் இப்போது செல்கிறார்கள் என்பதே தெரியாது.
இந்த காலத்திற்கு ஏற்ப கதை இருந்தால் அந்த இயக்குனர் தான் கிங். ஒருத்தன் பல வருட கணக்கில் உட்கார்ந்து படம் எடுப்பான். ஆனால் அந்தப் படம் காத்துதான் வாங்கும். யாருன்னு தெரியாமல் இருப்பான் ஒருத்தன். ஆனால் திடீரென்று பெரிய இயக்குனராக மாறிவிடுவான், இதுதான் இன்றைய சினிமா.
யார் இந்த இயக்குனர்..?
அறிந்தும் அறியாமலும், ஆரம்பம், சரவணா படத்தில் ஜோதிகாவின் அண்ணனாக என சினிமாவில் பல துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் நடிகர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
இடையில் சினிமாவில் சில நாட்கள் காணாமல் போன கிருஷ்ணகுமார். தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் oh enthan baby என்று திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. அந்தப் படத்தின் இயக்குனர் வேற யாரும் இல்லை, சின்ன சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த கிருஷ்ணகுமார் தான்.