விஜய்க்காக காத்திருந்த அப்பா, மகன்.. கடைசியில இப்படி ஆயிடுச்சே

Vijay: விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது பலபேருடைய கனவாக இருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் பொருத்தவரை அவருடைய படங்களுக்கு நல்ல வியாபாரம் இருக்கிறது. பட ரிலீஸ் ஆகும் முன்பே கோடிகளை குவித்து விடும்.

அதனாலேயே அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். ஆனால் மக்கள் பணிக்காக அவர் இப்போது நடிப்பை ஓரம் கட்டி விட்டார் ஜனநாயகன் தான் அவருடைய கடைசி படம்.

இதனால் சூப்பர் குட் பிலிம்ஸ் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த நிறுவனத்தின் 100 ஆவது படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என்பது அவர்களுடைய பெரும் ஆசை.

கடைசியில இப்படி ஆயிடுச்சே

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி கூட விஜயை சந்தித்து இது குறித்து பேசி இருக்கிறார். அவருடைய மகனான நடிகர் ஜீவா கூட 100வது படம் விஜய் அண்ணாவுடன் தான் என உறுதியாக சொன்னார்.

ஆனால் இதெல்லாம் தமிழக வெற்றி கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பு. தற்போது விஜய் முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என களம் இறங்கியுள்ளார். அது மட்டும் இன்றி ஆளும் கட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் துணை நிற்கிறார்.

அவருடைய வழியில் அவர் போகட்டும் என சூப்பர் குட் பிலிம்ஸ் தற்போது 100வது படத்தை வேறு ஒரு ப்ராஜெக்ட் வைத்து ஆரம்பிக்க இருக்கின்றனர். அதன்படி சூரிய வம்சம் 2 தான் இந்த நிறுவனத்தின் 100வது படமாக உருவாக இருக்கிறது.

இதில் சரத்குமார் மற்றும் ஜீவா நடிக்கின்றனர். மற்ற விவரங்கள் எல்லாம் விரைவில் வெளிவரும். சமீபத்தில் வெளியான 3BHK நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சூட்டோடு சூடாக சரத்குமாரை வைத்து இந்த படம் உருவாவது நிச்சயம் ஆடியன்ஸை இம்ப்ரஸ் செய்யும்.