விஜய்யை Reject செய்த டாப் இயக்குனர்.. இப்போ No.1 என்ற ஆச்சரியத்தில் புலம்பல்

Vijay : சினிமாவில் ஒரு உச்சநிலையை தொட்டிருக்கும் விஜயின் வாழ்க்கை புரட்டிப் பார்த்தால் எவ்வளவோ அசிங்கங்கள் நிறைந்திருக்கிறது. தற்போது அதற்கு ஏற்ற மாதிரி பாரதிராஜா ஒரு உண்மையை கூறுகிறார்.

விஜய் பட்ட பெரும் அவமானம்..

கிராமப்புற கதைகளை இயக்குவதில் பாரதிராஜா வல்லவர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த காலகட்டத்தில் இவர்தான் பெரிய இயக்குனர் ஆவார். இந்த சமயத்தில்தான் விஜயின் அப்பா S.A சந்திரசேகர் தனது மகனுக்காக பட வாய்ப்பு தேடி அலைகிறார்.

விஜயின் போட்டோவை எடுத்துக்கொண்டு பாரதிராஜாவிடம் செல்கிறார். என் பையனை உன் படத்தில் நடிக்க வாய்ப்பு குடு என்று கேட்டிருக்கிறார் சந்திரசேகர். அதற்கு பாரதிராஜா கூறிய பதில் : ஏன் உன் படத்தில் நடிக்க வைக்க கூடாது என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

பாரதிராஜாவின் அதிரடி பேட்டி..

“நான் ஒரு காலத்தில் விஜயின் முகத்தை பார்த்து ரிஜெக்ட் செய்து அனுப்பினேன். ஆனால் இன்று ஒரு பெரிய ஹீரோ விஜய். நானே ஒரு முறை விஜயிடம் நேருக்கு நேராக கூறி இருக்கிறேன்.

அன்று நான் உனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை ஆனால் இன்று நீ பெரிய ஹீரோ மனதில் எதையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன்- பாரதிராஜா”

வேண்டாம் என தூக்கி எறியப்பட்ட ஒருவன் தான் இன்று பெரிய ஹீரோவாக வளர்ந்து இருக்கிறான் என்று பலரும் இந்த பேட்டியை பார்த்து வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.