Criticizing the Manjumal Boyz: சமீபத்தில் மலையாள மொழியில் இருந்து வெளியாகிய திரைப்படம் தான் மஞ்சுமால் பாய்ஸ். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் மக்களின் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் வசூலை பெற்று வருகிறது. வசூலில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் ஆகா ஓகோ என்று பாராட்டுகளை அள்ளிக் குவிக்கிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து கமல், விக்ரம் இன்னும் பல பிரபலங்கள் அப்படத்தின் குழுவினருக்கும், இயக்குனருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தின் கதையானது குணா பாறைக்குள் சிக்கிக் கொண்டும் இருக்கும் ஒரு நபரை காப்பாற்றும் விதமாக இருக்கும். அதாவது ஓணம் விடுமுறையை முன்னிட்டு 11 நண்பர்கள் சேர்ந்து கொடைக்கானலை சுற்றி பார்க்க போகிறார்கள்.
அங்கே குடியும் கும்மாளமாய் இருக்கும் பொழுது ஒருவர் பாறைக்குள் சிக்கும் விதமாக கதை இருக்கும். அப்படிப்பட்ட இப்படத்தை பலரும் சூப்பர் என்று சொல்லி வரும் வேளையில் எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்தை எடுப்பதற்கு அடிப்படை அறிவு கூட கிடையாதா என்று தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார். அதாவது இப்படத்தை எல்லாரும் புகழ்ந்து வருவதால் அது இப்படி தான் இருக்கிறது என்று படத்தை பார்த்தேன்.
படத்தை பார்க்கும் பொழுதே எனக்கு ரொம்பவே எரிச்சல் ஊட்டும் விதமாக இருந்தது. அந்த படத்தில் காட்டுவது புனைவு அல்ல. தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பசங்களிடம் இருக்கும் மனநிலை தான் காட்டப்பட்டு இருக்கிறது. குடித்துவிட்டு விழுந்து கிடப்பது, அத்துமீறுவது போன்ற விஷயங்கள் தான். எங்கு பார்த்தாலும் அவர்கள் நாகரிகமே இல்லாமல் செய்து வருவார்கள்.
இவர்களுக்கு மற்ற மொழி பேசத் தெரியாது புரிஞ்சுக்க தெரியாது. ஆனால் இவர்களுடைய மொழி பிறருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று மிகத் தெனாவட்டுடன் அலைவார்கள். அந்த வகையில் இப்படத்தை பற்றி பேசுவது கூட அருகதையற் படமாக உணர்கிறேன் என்று தாறுமாறான விமர்சனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் வைத்திருக்கிறார்.
ஆனால் இவர் இப்படி கூறிய கருத்துக்கு எதிராக பலரும் அவர்களுடைய விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். அதாவது குடிபோதையில் சுற்றி வெத்துவிட்டாக இருப்பவர்கள் மலையாளத்தில் மட்டுமில்ல எல்லா இடத்திலுமே இருப்பார்கள். இன்னும் சொல்லப்பலால் தமிழ்நாட்டில் யாரும் குடித்துவிட்டு அராஜகம் பண்ணுவது இவருடைய கண்ணுக்கு தெரியவில்லையா? இந்த மாதிரியெல்லாம் இவர் கூறியதற்கான காரணம் அப்படம் வெற்றியடைந்த பொறாமையில்தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.