சூர்யாவிடம் ஆடியன்ஸ் எதிர்பார்ப்பது என்ன.? ரெட்ரோ தள்ளாட்டத்திற்கு காரணம் இதுவா

Suriya: கார்த்திக் சுப்புராஜ், சூர்யா கூட்டணியில் ரெட்ரோ மே 1ம் தேதி வெளியானது. பட ரிலீஸ்க்கு முன்பே கனிமா பாடல் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் கலக்கியது.

அதை அடுத்து பிரமோஷனும் பயங்கரமாக இருந்தது. இதனால் படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படத்தின் ரிசல்ட் என்னவோ கலவையான விமர்சனம் தான். ஒரு சிலருக்கு படம் ஓகே ரகம். ஒரு சிலருக்கு படம் தேவையில்லாத ஆணி.

இப்படியான கமெண்ட்கள்தான் பரவிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஆடியன்ஸின் எதிர்பார்ப்பு தான் என்ன. கஷ்டப்பட்டு உசுர கொடுத்து நடிச்சாலும் படம் அவர்களுக்கு பிடிக்க மாட்டேங்குது.

ரெட்ரோ தள்ளாட்டத்திற்கு காரணம் இதுவா

இதுதான் டாப் இயக்குனர்கள் பெரிய ஹீரோக்கள் அனைவரின் மைண்ட் வாய்ஸ். அப்படி என்றால் ரசிகர்களின் டேஸ்டை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

தற்போது சூர்யா விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது. அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஜாலியான ஒரு படத்தை தான். ரத்தம் துப்பாக்கி வன்முறை இல்லாமல் ஃபீல் குட் படத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்.

1000 கோடி 2000 கோடி வியாபாரத்திற்காக படம் பண்ண வேண்டாம். இயல்பான எல்லோர் வாழ்க்கையோடும் பொருந்தி போகிற மாதிரி ஒரு படத்தை பண்ணுங்க சூர்யா அண்ணா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏனென்றால் இப்போது இசைக்கும் காமெடிக்கும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ரெட்ரோ வெளியான நாளில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரிலீஸ் ஆகி இருந்தது.

புதுமுக இயக்குனர் அபிஷன் வேற லெவலில் கலக்கியிருந்தார். படம் ஆடியன்ஸை கவர்ந்ததற்கு முக்கிய காரணம் எதார்த்தமான கதை தான்.

தேவையான இடத்தில் சென்டிமென்ட் காமெடி கலகலப்பு என அனைத்தும் கலந்த கலவையாக படம் இருந்தது. அதனாலயே ரெட்ரோவை இப்படம் ஓவர் டேக் செய்து விட்டது.

ஆக மொத்தம் சூர்யா ஜாலியான படம் பண்ண வேண்டும். பான் இந்தியா, ஹீரோயிசம் எல்லாத்தையும் விட்டுட்டு இறங்கி வாங்க நாங்க ஜெயிக்க வைக்கிறோம் என்பதுதான் சினிமா ரசிகர்களின் தற்போதைய கருத்து.