டாப் 10 நடிகர்கள்.. காணாமல் போன AK, விஜய் சேதுபதியை பின்னுக்கு தள்ளிய யோகி பாபு

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டின் சிறந்த நடிகர்கள் நடிகைகள் யார்? டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் யார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கோலிவுட்டின் சிறந்த நடிகர்கள் யார் என்று டாப் 10 பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா தற்போது உலகின் தலைசிறந்த சினிமா துறையில் தமிழ் சினிமா 3வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் திறமை வாய்ந்த தமிழ் நடிகர்கள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களின் அபார நடிப்பு திறமையால் தான் தமிழ் சினிமாவின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இவர்களின் திறமை காரணமாக நிச்சயம் ஒரு நாள் தமிழ் சினிமாவை உலகம் கொண்டாடும். தற்போது டாப் 10 தமிழ் நடிகர்கள் பட்டியலில் யார் யார் எந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்று பார்க்கலாம். அதன்படி இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இடத்தை பிடித்து எப்பவும் நான் தான் சூப்பர் ஸ்டார் என நிரூபித்துள்ளார்.

அடுத்ததாக தளபதி விஜய் இரண்டாவது இடத்தை பிடித்து அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்பது போல கெத்து காட்டியுள்ளார். இவரை தொடர்ந்து தனுஷ் 3, சூர்யா 4, சிம்பு 5, ஆர்யா 6, எஸ்.ஜே.சூர்யா 7, சிவகார்த்திகேயன் 8, யோகி பாபு 9, விஜய் சேதுபதி 10 என இடம் பிடித்துள்ளனர்.

தங்களுக்கு பிடித்த நடிகர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், மற்றொரு புறம் இந்த பட்டியலில் அஜித் பெயர் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் எளிமையான மனிதர், திறமையான நடிகர் என பலர் அஜித்தை புகழ்ந்த நிலையில் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் அஜித் பெயர் இடம்பெறாதது சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.