Cinema : சினிமாவில் தற்போது ஹீரோக்கள், ஹீரோயின்கள் பேமஸ் ஆவதை விட, படங்களை கஷ்டப்பட்டு இயக்கும் இயக்குனர்கள் தான் இன்று முன்னிலை வகிக்கிறார்கள். ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல
மணிரத்தினம், சங்கர், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் திலிப் குமார்,பா ரஞ்சித் இவர்கள்தான் தற்போது தமிழ் சினிமா கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர்கள். இவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது பயங்கரமான வரவேற்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த இயக்குனர்கள் படம் எடுப்பதில் மட்டும் திறமையானவர்கள் அல்ல. சினிமாதுறையில் பெரிய பெரிய ஹீரோக்களின் இமேஜை உருவாக்கியுள்ளனர். அந்த வரிசையில் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தின் மூலம் தனுஷை தேசிய விருது வாங்க செய்தார். அட்லி விஜயை வைத்து தெரி, மெர்சல், பிகில் போன்ற படங்களை உருவாக்கி விஜயின் தனித்துவத்தை மேலும் உணர வைத்தார்.
லோகேஷ் கனகராஜ் கமல், விஜய், கார்த்தி, விக்ரம் போன்றவர்களின் படங்களை இயக்கி இந்த நடிகர்களின் தரத்தை உயர்த்தினார். நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி மாஸ் காட்டினார். அதன் பின் ரஜினியின் ஜெயிலர் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்தார். மணிரத்தினம் சங்கர் பற்றி சொல்லவே தேவையில்லை அவர்கள் தான் இந்த சினிமாவின் உச்சகட்ட இயக்குனர்கள்.
சங்கரின் ரகசிய விஷயம்..
இந்நிலையில் தற்போது சங்கர் தனது வேள்பாரி திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து இவர் இந்த திரைப்படத்தை தயாரிக்க லைக்கா ப்ரொடக்ஷன், ஸ்டுடியோ கிரீன், திருப்பதி பிரதர்ஸ், தெண்ணான்டாள் ஸ்டுடியோ போன்ற இந்த 4 தயாரிப்பு நிறுவனங்களுடன் இடைவிடாமல் கால், மெசேஜ் மூலம் சங்கர் செய்து வந்தாக தெரிய வந்துள்ளது.
4 பேரும் ரஜினிகாந்த் கால் சீட் தந்தால் மட்டுமே ஒப்புதல் தருவோம் என்று காத்திருக்கிறார்கள். இந்த தகவல்களை கேள்விப்பட்ட சினிமா வட்டாரம் சங்கர் இப்படி தொடர்ந்து டார்ச்சர் பண்றாரு என்று அரசல் புரசலாக பேசி வருகிறார்கள்.