உங்க சாரி தேவை இல்ல நீதி தான் வேணும்.. போராட்டக் களத்தில் TVK தலைவர் விஜய்

TVK-Vijay: திருபுவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணம் அடைந்ததை கண்டித்து தமிழக வெற்றி கழகம் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அதில் தலைவர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

முதன்முறையாக போராட்ட களத்திற்கு வந்துள்ள அவர் ஆளும் கட்சிக்கு எதிராக பல கேள்விகளை முன் வைத்துள்ளார். கருப்பு உடையில் தன்னுடைய எதிர்ப்பை காட்டிய விஜய் மைக்கை பிடித்து சிங்கம் போல் கர்ஜித்துள்ளார்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர் அஜித் குமாருக்கு நடந்தது மிகப்பெரும் கொடுமை. அந்த குடும்பத்திடம் முதல்வர் சாரி கேட்டார். அது தப்பு கிடையாது. ஆனால் அவருடைய ஆட்சியில் இதற்கு முன்பு 24 காவல் மரணங்கள் நடந்துள்ளது.

போராட்டக் களத்தில் TVK தலைவர் விஜய்

அவர்களுக்கெல்லாம் என் சாரி சொல்லவில்லை நிவாரணம் தரவில்லை. அவங்களுக்கும் இத செஞ்சிடுங்க. ஆனா எங்களுக்கு தேவை உங்களோட சாரி கிடையாது நீதிதான்.

உங்களுடைய ஆட்சியில் இன்னும் எத்தனை கொடுமைகள் தான் நடக்கப் போகிறது. அண்ணா யுனிவர்சிட்டி மாணவிக்கு நடந்தது முதல் இப்போது அஜித்குமார் வரை பல விஷயங்கள் இருக்கிறது.

அத்தனைக்கும் நீதிமன்றம் தலையிட்டு உங்களை கேள்வி கேட்கிறது. அப்பொழுது நீங்கள் முதல்வர் என்ற பதவியில் ஏன் இருக்கிறீர்கள் என சரமாரியாக தன்னுடைய கேள்வியை முன் வைத்துள்ளார் விஜய்.