ரெண்டு இமயமலையை தூக்கி சாப்பிட்ட ரஜினி.. No.1 இடத்தை பிடித்த கூலி

Rajinikanth : சினிமாவில் தனது ஸ்டைலான நடையாளும், நடிப்பாலும் திரையில் மக்களை ஈர்த்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தட்டிச் சென்றவர் ரஜினிகாந்த்.

74 வயதை எட்டினாலும் சினிமாவில் இருக்கும் அந்த நாட்டமும், சுவாரசியமும் ரஜினிகாந்துக்கு சற்றும் குறையவில்லை. இன்னும் சினிமாவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் உருவாகியது கூலி திரைப்படம். 2024 கூலியின் முதல் போஸ்டர் வெளியானதுமே ரசிகர்களுக்கிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஜெயலலி படத்தை விட கூலி திரைப்படத்தில் தலைவர் மாஸ் காமிக்கிறாரே என்று பல மீம்ஸ்களும் வலைத்தளத்தில் உலாவியது.

எந்த திரைப்படம் வந்தாலும், மக்கள் இடையே பேச்சுவார்த்தை பலமாக பேசப்பட்டு தான் வரும். அந்த வகையில் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ரஜினியின் கூலி திரைப்படம். அதாவது தலைவரின் கூலி திரைப்படம் வெளியாகும் அதே நாளில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் என்டிஆர் இணைந்து நடித்த #war2 திரைப்படம் வெளியாக இருக்கிறது.

IMDB தற்போது ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ரஜினியின் கூலி திரைப்படம் இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதே நாளில் வெளியாக இருக்கும் War2 திரைப்படம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் ரஜினியும் கூலி திரைப்படமும் ரித்திக் ரோஷன் மற்றும் என்டிஆர் -இன் War2 திரைப்படம் ஒரே நாளில் வெளியாவதால் பாக்ஸ் ஆபீஸ் யாருக்கு நிறைய போகிறது என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.