கோலிவுட்டில் தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என மிகவும் பிசியாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது கைவசம் கண்ணை நம்பாதே, ஏஞ்சல், நெஞ்சுக்கு நீதி, மகிழ்திருமேனி இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி. இதில் நெஞ்சுக்கு நீதி படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஹிந்தியில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி படம். ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளின் கொடூரமான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குறித்த கதை தான் ஆர்ட்டிக்கிள் 15.

தமிழில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் இருளர்களை மற்ற சமுதாயத்தினர் எப்படி நடத்துகிறார்கள்? அவர்களால் இருளர்களுக்கு என்னென்ன அவலங்கள் நேர்கிறது என்பதை அப்பட்டமாக பேசி இருந்தது. இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படம் அதைவிட உணர்வுப்பூர்வமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஹிந்தியில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படம் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக நடக்கும் வன்மங்களையும், பல ஜாதி பெயர்களையும் அப்படியே அப்பட்டமாக வெளிப்படையாக துயிலுரித்து காட்டி இருப்பார்கள். ஆனால் அப்படத்தின் தமிழ் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி படம் எந்த அளவிற்கு உண்மையை உடைத்து பேசியுள்ளது என்பது தெரியவில்லை.

இங்குதான் ஏதேனும் சிறிய ஜாதிய குறியீடு தென்பட்டாலே படத்திற்கு எதிராக போர்க்கொடியை தூக்கி விடுகிறார்களே. அந்த வகையில் நெஞ்சுக்கு நீதி படம் எப்படி உள்ளது என்பதை படம் வெளியாகும் வரை பொறுமையாக இருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் காக்கி சட்டையில் கண்களில் நெருப்புடன் சும்மா கம்பீரமாக உதயநிதி ஸ்டாலின் காட்சி அளிக்கிறார். இதுவரை பார்த்த உதயநிதியை இப்படத்தில் காண முடியாது. முற்றிலுமாக மாறி வேறு ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார் உதயநிதி. எனவே படம் நிச்சயம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.