நான்தான் காமெடி சக்கரவர்த்தி என்று ஒரு காலத்தில் மிகவும் கர்வத்தோடு இருந்தார் வடிவேலு. என் காமெடியை மிஞ்சுவதற்கு யார் இருக்கிறார் என்ற கர்வம் அவருக்கு இருந்தது. 100 வருடம் கழித்து கூட என் காமெடியை ரசிப்பார்கள் என அவரே கூறிக் கொண்டு திரிந்தார்.
இப்படி நகைச்சுவை கிங் என்று அவரே நினைத்து வந்தது மட்டுமல்லாமல். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தான் நடிக்கும் படங்களில் குடைச்சல் அதிகமாக கொடுத்து வந்தார். ஒன்பது மணிக்கு சூட்டிங் என்றால் ஐயா 11 மணிக்கு தான் வருவாராம்.
அந்த காலகட்டத்திலேயே நாள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் வடிவேலு. ஒரு நாளைக்கு பத்து லட்சம் வரை சம்பளத்தை வாரி இறைத்தனர் தயாரிப்பாளர்கள். நாள் சம்பளம் வாங்குவதால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் நடித்துவிட்டு கிளம்பி விடுவாராம்.
நகைச்சுவைக்குள் சந்தானம் என்ட்ரியானதும், அரசியல் களத்தில் ஜெயலலிதா அம்மா ஜெயித்ததும் தான் வடிவேலுக்கு பேரடியாக அமைந்தது. அம்மாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்த வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் அவர் கோபத்துக்கு ஆளாகி விடுவோமோ என பாதி பேர் விலகி விட்டனர்.
இவருக்கு சம்பளம் மட்டுமே கோடிக்கணக்கில் கொடுக்க வேண்டும் என்று பயந்து மீதம் உள்ளவர்களும் விலகி விட்டார்கள். அப்படி, இப்படி என்று 14 வருடங்கள் சினிமா கேரியர் அவருக்கு தடையானது. ரீ என்ட்ரி கொடுத்து படங்களில் நடித்தாலும் வடிவேலுவின் காமெடிகள் எடுபடவில்லை.
இப்பொழுது கேங்கர்ஸ் ப்ரோமோஷன் விழாவில் சுந்தர் அண்ணன் படம் ஹிட் ஆகும். 18 வருடங்கள் எங்களை சேர விடாமல் விதி சதி செய்துவிட்டது என்றெல்லாம் பேசி வருகிறார். கடைசியாக இவர்கள் இருவரும் 2006 ஆம் ஆண்டு ரெண்டு படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.