விஜயகாந்த் முதுகில் குத்திய வடிவேலு கலைஞர் 100 விழாவிற்கு என்டரி.. லைஃபை தொலைச்சிட்டியே பங்காளி

Kalaingar 100th Programme Entry Vadivelu: ஒரு காமெடி நடிகரை ஒய்யாரத்திற்கு தூக்கி விட்டு கொண்டாடிய மக்கள் தற்போது எந்த அளவுக்கு மட்டமாக விமர்சிக்க முடியுமோ அதற்குத் தகுந்தார் போல் வடிவேலு நிலைமை மாறிவிட்டது. அதற்குக் காரணம் செய்நன்றி மறந்து தூக்கி விட்டவரையே முதுகில் குத்தும் அளவிற்கு வடிவேலு பேசிய வார்த்தைகள் தான்.

என்னதான் விஜயகாந்துக்கு இவருடன் மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்தாலும் பேசிய மேடைகளிலும்,கொடுத்த பேட்டியிலும் விஜயகாந்த் மீது வன்மத்தை கொட்டியதால் என்னமோ இவருடைய மொத்த பெயரும் டேமேஜ் ஆகிவிட்டது. இதற்கு மேலாக விஜயகாந்த் இறந்த பின்பும் வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தாமல் போனது ரொம்பவே கொடூரமான புத்தியை பார்க்க முடிந்தது.

இந்த ஒரு விஷயத்தால் வடிவேலுவை பார்த்தாலே எரிச்சல் வருகிறது. அத்துடன் அவருடைய காமெடி வந்தாலே அதை பார்ப்பதற்கு மனம் வரமாட்டேங்குது என்று சொல்லும் அளவிற்கு அனைவரது மனதிலும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார். போதாக்குறைக்கு நேற்று கலைஞர் 100வது விழா நடைபெற்ற பொழுது அதற்கு முதல் ஆளாக வருகை கொடுத்து போனது இவருடைய பச்சோந்தியான கேரக்டரை பார்க்க முடிந்தது.

பொதுவாக ஊரில் சொல்ற விஷயம் எந்த நல்லதுக்கு போக விட்டாலும் கெட்டதுக்கு போக வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது கொஞ்சம் கூட இல்லாத வடிவேலு அட்லீஸ்ட் தன்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து கை கொடுத்த விஜயகாந்த் இறப்பிற்கு போய் அஞ்சலி செலுத்தி வந்திருக்கலாம்.

ஆனால் அப்படி ஏதும் பண்ணாமல் கலைஞர் நிகழ்ச்சிக்கு சென்று எந்த அளவிற்கு ஜால்ரா அடிக்க முடியுமோ அதை வழக்கம் போல் செய்துவிட்டார். இப்படி இவருடைய செயல்கள் மூலம் சமூக வலைதளங்களில் இவருடைய பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகும் அளவிற்கு நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊத்தி வருகிறார்கள். இதோட வடிவேலு லைஃப் தொலைந்து விட்டது. இனி சினிமா கேரியரில் இவருக்கு எல்லாமே இறங்கு முகம் தான் என்று நெட்டிசன்கள் இவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.