Vanitha VijayaKumar : வனிதா விஜயகுமார் நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் களமிறங்கி இருக்கும் படம் தான் மிஸஸ் & மிஸ்டர். இந்த படத்தை வனிதா பிலிம் புரொடக்ஷன் நிறுவனம் மூலம் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார்.
மேலும் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஆர்த்தி கணேஷ், செஃப் தாமு போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். மேலும் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அடல்ட் காமெடி ஜானரில் வனிதா இயக்கி இருக்கிறார்.
கதைபடி ராபர்ட், வனிதா இருவரும் கணவன் மனைவியாக நடித்திருக்கின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார் ராபர்ட் மாஸ்டர். மேலும் வனிதாவுக்கு 40 வயதை எட்டிய நிலையில் தனது வயதை குறித்து கவலைப்படுகிறார்.
மிஸஸ் & மிஸ்டர் பட விமர்சனம்
அதே சமயம் அவரை குழந்தை பெற்றுக் கொள்ளும்படி உறவினர்கள் கூறுகிறார்கள். ஆனால் ராபர்ட் மாஸ்டர் இதில் விருப்பமில்லாமல் இருக்கிறார். இதனால் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்து விடுகிறார்கள். கடைசியில் இவர்களுக்கு குழந்தை பிறந்தாதா என்பதுதான் இந்த படத்தின் கதை.
சாதாரணமாக 40 வயதை எட்டிய பெண்களின் மனநிலையை வெளிப்படுத்தும்படி தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார் வனிதா. படத்தில் சில காட்சிகளில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் சளிப்பை தட்டும்படி எதார்த்தமான காமெடியாக இருக்கிறது.
படத்தின் இடம்பெற்ற பாடல்களும் கதையுடன் ஒட்டாமல் இருக்கிறது. ஒளிப்பதிவும் பெரிய அளவில் கை கொடுக்காமல் போனது. வேண்டுமென்றால் ரசிகர்கள் ஒரு தடவை இந்த படத்தை பார்க்கலாம் என்றபடி தான் இருக்கிறது.
சினிமாபேட்டை ரேட்டிங் : 2.5/5