Vetrimaran: வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் இதற்கான அறிவிப்பு வரும் நிலையில் படம் தொடங்காமல் தற்போது வரை தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வெற்றிமாறன் சூர்யாவை வைத்து தனது கனவு படமான வாடிவாசலை எடுக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அதன் பிறகு விடுதலை படத்தில் வெற்றிமாறன் பிஸியாகிவிட்டார். இதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து விட்டார்.
மற்றொருபுறம் சூர்யாவும் கங்குவா படத்தில் நடித்து வந்தார். இப்போதாவது தொடங்குமா என்று ரசிகர்கள் நச்சரித்துக் கொண்டிருந்தனர். இந்த சூழலில் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு ஒரு பேட்டியில் பங்கு பெற்றார்.
வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்
அப்போது ஜூன் மாதம் வாடிவாசல் தொடங்கும் என்று கூறியிருந்தார். ஆனால் வெற்றிமாறன் தரப்பிலிருந்து ஆகஸ்ட் எட்டாம் தேதி கண்டிப்பாக வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த படத்திற்காக இரண்டு காளைகளுக்கு சில வருடங்களாகவே பயிற்சி கொடுத்து வருகிறார்கள். ஏஐ தொழில்நுட்பத்தையும் இந்த படத்தில் கொண்டு வர இருக்கின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ படம் மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இப்போது வாடிவாசல் அப்டேட் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.