Vijay : நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது என நமக்கு தெரியும். ஆனால் இவர் எப்போவோ தனது அரசியல் பயணத்தை திரையில் ஆரம்பித்து விட்டார் என இங்கு பலருக்கும் தெரிந்தே ஒன்றே.
கொஞ்சம் கொஞ்சமாக இவர் எப்படி அரசியல் பேசி இன்று களத்தில் இறங்கி செயல்படுகிறார் என்று பார்க்கலாம். அரசியலுக்கு வருவதென்று முன்கூட்டியே திட்டம் தீட்டினாரா விஜய் என்பது போல் உள்ளன இந்த தகவல்கள்.
விஜய் அரசியலை கையிலெடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது..
விஜய் நடிப்பில் வெளிவந்த “மதுர” படத்தில் கூட விஜய் அரசியலுக்கு வந்தால் பயன்படுத்தி கொள்ளலாம் என்றே முன்கூட்டியே “வாராண்டா வாராண்டா” பாட்டு அமைந்திருக்கும் போல. இதற்க்கு அடுத்து “தலைவா” படத்தில் கூட சில காட்சிகள் அரசியல் நோக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது போல இருக்கும். இந்த படத்தில் கூட “தளபதி தளபதி” பாடல் அரசியல் நோக்கத்திக்காக எழுதப்பட்டது போல இருக்கும்.
“கத்தி” படத்தில் கூட இவர் பேசிய வசனங்களை அனைத்தும் இன்றுவரை தீயாக பரவி வருகின்றன. “சர்க்கார்” படத்தில் கூட முழுக்க முழுக்க அரசியல் பற்றிய படமாகவும், ஓட்டு பற்றிய படமாகவும் இருக்கும்.
இதற்கு அடுத்து “மாஸ்டர்” படத்திலும் காலேஜ் தேர்தல் வரும்போது கூட விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய வகையில் விஜய் பேசியிருப்பார். இவ்வாறுதான் இவர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலுக்குள் வந்தார் என சிலர் பேசிக்கொள்கிறார்களாம்.
தற்போது அரசியலுக்கு வந்ததற்கு பிறகு “ஜனநாயகன்” படம் வெளிவரவிருக்கிறது. இந்த படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் அதற்கு அடுத்ததாக “தேர்தல்” நடைபெறப்போகிறது எனவே நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்துவருகின்றன.
அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலுக்கு வந்தவுடன் இவரை புகழ்ந்து புதிதாக பாடல்கள் தேவையில்லைஎன்பது போல. “புலி உருமுது”, “தளபதி தளபதி”, “வாராண்டா வாராண்டா”, இதுபோல நிறைய பாடல்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. விஜய்க்கு முன்கூட்டியே அரசியல் ஆசை இருந்ததா? தக்க சமயத்திற்காக காத்திருந்தாரா? என்றெல்லாம் சந்தேகம் எழுகிறதாம்.