Vijay-Yaadhum Ariyaan: சமீப காலமாக வெளிவரும் படங்களில் எல்லாம் விஜய் ரெஃபரன்ஸ் அதிகமாக இருக்கிறது. அதனால் தான் படம் ஹிட் ஆகுது அப்படின்னு தளபதி ரசிகர்கள் வேறு ஒரு பக்கம் அலப்பறை செய்கின்றனர்.

இன்னொரு பக்கம் பார்த்தால் இதை படத்திற்கு ஒரு நல்ல விளம்பரமாக பயன்படுத்துகின்றனர். அப்படித்தான் தற்போது வெளியாகி உள்ள யாதும் அறியான் ட்ரெய்லரில் விஜய் ரெஃபரன்ஸ் இடம் பெற்றுள்ளது.
கோபி இயக்கத்தில் தம்பி ராமையா, அப்புகுட்டி என பலர் நடித்திருக்கும் இப்படம் திரில்லர் சம்பந்தப்பட்ட கதையாகும். இதன் ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
தளபதி ரெஃபரன்ஸ்னா இப்படி இருக்கணும்
அதை செய்வது விஜய் ரசிகர்கள். ஏனென்றால் ட்ரெய்லர் ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாக இருந்தாலும் கூட முடியும் போது ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. என்னவென்றால் அதில் இது என்ன வருஷம் என ஹீரோ கேட்க 2026 என்கிறார்கள்.
அதன் பிறகு டீக்கடையில் தொங்கவிடப்படும் தினசரி நாளிதழில் தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. பெண்கள் இளைஞர்கள் விவசாயிகளுக்கு புதுத் திட்டம் முதல்வர் விஜய் அறிவிப்பு என இருக்கிறது.
இதைத்தான் விஜய் ரசிகர்கள் இப்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அடுத்த வருஷ தேர்தலில் என்ன நடக்கும்னு இப்பவே காட்டிட்டாங்க என பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
வழக்கம்போல இதற்கு எதிர்ப்புகளும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. உங்களுக்கு முதல்வர் நாற்காலி கேக்குதா டெபாசிட் கூட கிடைக்காது பகல் கனவு என வழக்கம் போல ஆளும் கட்சி ஆதரவாளர்கள் கலாய்த்து வருகின்றனர்.