விஜய் சேதுபதி கேட்ட சம்பளம்.. உண்மையா இவர் ஹீரோவா? வில்லனா?

Vijay Sethupathi : விஜய் சேதுபதி-யை பிடிக்காத நபர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது. இவரது எதார்த்தமான நடிப்பு அனைவரும் கவர்ந்துவிடும். அடுத்தடுத்து நிறைய படங்களை கொடுத்து கொண்டிருக்கிறார்.

இவர் ஹீரோ ரோலாக இருக்கட்டும், இல்லை வில்லன் ரோலாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் ஏற்று கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றி அந்த கதாபாத்திரத்தையும் பிரபலமாகி விடுவார்.

விஜய் சேதுபதியை வில்லனாக ரசிப்பவர்கள் ஏராளம். இவர் நடித்து தற்போது வெளிவந்திருக்கும் “தலைவன் தலைவி” படம் எதிர்பார்த்தை விட மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.

சம்பளத்தை உயர்த்திய பிரபலம்..

பெரிய அளவில் வசூலையும் பெற்று கொடுத்து கொண்டிருக்கிறது. இவரும் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளாராம். “தலைவன் தலைவி” படம் ரிலீஸ்க்கு பிறகு இவர் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

அதாவது இனிமேல் இவர் ஹீரோவாக நடிப்பதற்கு 45 கோடியும், வில்லனாக நடிப்பதற்கு 30 கோடியும் பெற உள்ளதாக பேசிக்கொள்கிறார்களாம். இதை பற்றிய உறுதியான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளத்தை எல்லாம் நடிகர்கள் ஏற்றிக்கொண்டே செல்வதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பீதியில் உள்ளதாக திரைத்துறையில் பேச்சு எழுகிறது. போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் வந்தால் தலை தப்பும் இல்லையென்றால்! என கடிந்து கொள்கிறார்களாம் சில தயாரிப்பாளர்கள்.