கிஃப்ட் என்ற பெயரில் கடனாளி ஆக்குறாங்க.. விஜய் டிவி பற்றி அம்பலமான விஷயம்

Vijay Tv : விஜய் டிவி குறுகிய காலத்திலேயே சின்னதிரையில் அதிக ரசிகர்களை கவர்ந்தது. இதற்கு காரணம் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புது வகையான ரியாலிட்டி ஷோக்கள் தான். குறிப்பாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதில் குழந்தைகளுக்கு தனியாகவும் அடல்ட்டுக்கு தனியாகவும் பாடல் நிகழ்ச்சி வைத்து பரிசுகளை வழங்கி இருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று டைட்டில் வின்னர் பெறுபவர்களுக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த சீசன்களில் திவாகர், செந்தில் கணேஷ், முருகன், ஸ்ரீதர் சேனா மற்றும் அருணா போன்றவர்கள் டைட்டில் வின்னர் பட்டங்களை வென்றிருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் வீடு கிடைத்ததா என்பதை கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

டைட்டில் வின்னரை கடனாளியாக்கும் விஜய் டிவி

அதாவது 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கொடுத்தால் அதில் அரசுக்கு கிட்டத்தட்ட 15 லட்சம் வரி கட்ட வேண்டுமாம். அப்படி கட்டினால் தான் அந்த வீடு இவர்களது கைக்கு வந்து சேரும். சமீபத்தில் சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னரான அருணா கூட இதுகுறித்து யூடியூப்பில் பேசுகிறார்.

அதாவது எங்களிடம் அவ்வளவு தொகை இல்லை என்பதால் இதற்கான நேரம் கேட்டிருக்கிறோம். 15 லட்சம் கட்டினால் தான் எங்கள் கைக்கு அந்த வீடு கிடைக்கும் என்று கூறி இருந்தார். பொதுவாகவே டைட்டில் வின்னர் பெற்றவர்கள் பெரிய வசதி வாய்ப்பு இல்லாதவர்களாக தான் இருக்கிறார்கள்.

அவர்களால் 15 லட்சம் திரட்ட வேண்டும் என்பது மிகப்பெரிய விஷயம். பரிசு என்ற பெயரில் அவர்களை கடனாளியாக மாற்றுகிறார்கள் விஜய் டிவி என்ற விமர்சனங்கள் வருகிறது. மேலும் இவ்வாறு ஒரு வீட்டை பரிசாக கொடுப்பதற்கு பதிலாக பணத்தை கொடுக்கலாம்.

அவர்கள் சொந்த ஊரிலேயே நன்றாக வீடு கட்டிக் கொள்வார்கள் என்று பலர் கூறுகின்றனர். மேலும் விஜய் டிவியில் டைட்டில் வின்னர் ஆகியும் இன்னும் அந்த வீட்டில் குடி ஏறாமல் பலர் இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.