அம்மாடியோ முதல் நாளிலேயே இவ்வளவு வசூலா.! ரீ ரிலீசில் சாதனை படைத்த கில்லி

Ghilli Re Release: இப்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. டாப் ஹீரோக்களின் பழைய படங்கள் தியேட்டரில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அதில் தற்போது விஜய்யின் கில்லி ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்த இப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இப்படம் விஜய்க்கு கொஞ்சம் ஸ்பெஷல் என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் இவர் சில சரிவுகளை சந்தித்த சமயம் அது.

மாஸ் காட்டும் கில்லி

அப்போது வெளியான இப்படம் 50 கோடி வரை வசூலித்து ஹிட் அடித்தது. அது மட்டுமின்றி திரிஷா விஜய் ஜோடியின் கெமிஸ்ட்ரி அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது.

அப்படிப்பட்ட இப்படம் 20 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அதன்படி கில்லியின் முதல் நாள் வசூல் 10 கோடியாக உள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தியேட்டர்களில் ஆடியன்ஸின் வரவு உயர்ந்துள்ளது. மேலும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தற்போது கில்லி சொல்லி அடித்துள்ளது.