Veera Dheera Sooran: நடிகர் விக்ரம் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பிய வீர தீர சூரன் படம் நேற்றைய முன்தினம் ரிலீஸ் ஆனது.
இந்த படம் பெரும்பாலும் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் முழுமையான திரை அலசலை பற்றி பார்க்கலாம்.
இந்த படத்தை படத்தை பொறுத்த வரைக்கும் ரொம்ப நல்லா இருக்கு, நல்லா இருக்கு என்பதற்கு இடையேயான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
முழுமையான திரை அலசல் இதோ!
இந்த படத்தில் மிகப்பெரிய பாசிட்டிவ் எதார்த்தமான திரைக்களம். தன்னுடைய நடிப்பின் மூலம் சினிமாவில் பல்வேறு பரிமாணத்தை கொண்டு வந்து கொண்டிருக்கும் விக்ரம், எஸ் ஜே சூர்யா, சுராஜ் காம்போ இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கிறது.
மேலும் துஷாரா விஜயன் மற்றும் விக்ரமின் கெமிஸ்ட்ரி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. படம் பார்த்தவர்களை பொறுத்த வரைக்கும் மற்றும் விக்ரம், எஸ் ஜே சூர்யா சந்திக்கும் சீன் கிளைமாக்ஸ் காட்சி மற்றும் இரண்டாவது பாதியில் வரும் 16 நிமிட சிங்கிள் ஷாட் படத்திற்கு பெரிய பக்க பலம்.
படத்தின் நெகட்டிவ் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது தேவையில்லாத ஃப்ளாஷ் பேக் சீன். அதை தாண்டி முதல் பாதையில் இருந்த நேர்த்தி படத்தின் இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது.
ஆனால் கடந்த பத்து வருடங்களில் விக்ரம் நடித்த ரிலீஸ் ஆன படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இது பெஸ்ட் படமாக அமைந்திருக்கிறது.
விக்ரம், SJ சூர்யா, சுராஜ் மற்றும் இயக்குனர் அருணுக்கு இது ஒரு கேரியர் பெஸ்ட் படமாக அமையுமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது.
பெரும்பாலும் படம் பார்க்க போகும் ரசிகர்களுக்கு இந்த கதைக்களம் ரொம்பவும் பிடித்துப் போகத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது.