புது ரூட்டில் தயாரிப்பாளர்களுக்கு சங்கு ஊதும் யோகி பாபு.. சைடு கேப்பில் முருக பக்தர் வைத்த உண்டியல்

யோகி பாபு அடுத்த வருடம் 2026 டிசம்பர் வரை கையில் 26 படங்கள் வைத்திருக்கிறார். இந்த லிஸ்டில் ஆறு முதல் ஏழு படங்களில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். மண்ணாங்கட்டி, சலூன், பூச்சாண்டி, மெடிக்கல் மிராக்கிள் என ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.

தற்சமயம் கருப்பு, LIK, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்த வாரத்தில் தொடங்கவிருக்கும் ஜெய்லர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அட்லி சாருக்கானை வைத்து இயக்கும் லயன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

இப்படி இரண்டு மூன்று வருடங்கள் பிசியாக இருக்கும் யோகி பாபு ஒரு நாளைக்கு ஐந்து முதல் 10 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார். பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் காமெடி செய்வதற்கு இரண்டு கோடிகள் வரை கல்லா கட்டுகிறார். இதுபோக இப்பொழுது கஜானாவை நிரப்புவதற்கு புது ரூட்டை கண்டுபிடித்துள்ளார்.

சூட்டிங் நடைபெறும் இடங்களில், ஹீரோ ஹீரோயின் கேமராமேன், டைரக்டர் என அனைவருக்கும் கேரவன்கள் வழங்கப்படும். பெரும்பாலும் சூட்டிங் இல்லாத நேரத்தில் இவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுவதற்கும், மேக்கப் போடுவதற்கும் அதை பயன்படுத்திக் கொள்வார்கள். அதற்கு உண்டான வாடகையும் தயாரிப்பாளர்கள் தான் கொடுக்க வேண்டும்.

இப்பொழுது யோகி பாபு சொந்தமாக ஒரு கேரவன் வாங்கி விட்டாராம். அதன் வாடகை ஒரு நாளைக்கு 40 ஆயிரம்மாம் இந்த தொகையை தனியாக அவருடைய மனைவி அக்கவுண்டிற்கு செலுத்தி விட வேண்டுமாம். டிரைவர், பேட்டா டீசல் என மொத்தமும் இதில் அடங்கும்.