எனக்கு எவ்வளவு பேர் பணம் தரணும் தெரியுமா.? யோகி பாபுவின் ஆதங்கம்

Yogi Babu : கஜானா படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில் யோகி பாபு எந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. சம்பளம் மட்டும் பல மடங்கு கேட்கிறார்.

பணம் கொடுத்தால் தான் ப்ரோமோஷனில் கலந்து கொள்வாயா என கண்டபடி யோகி பாபுவை விமர்சித்திருந்தார். இந்த சூழலில் ஜோரா கைய தட்டுங்க என்ற படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த படம் மே 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான பிரமோஷனில் யோகிபாபு கலந்து கொண்டார். அப்போது பேசிய யோகி பாபு என் படத்தின் சம்பளத்தை நான் எப்போதுமே முடிவு செய்ததில்லை.

சம்பள பாக்கி குறித்த பேசிய யோகி பாபு

படக்குழு தான் தன்னுடைய சம்பளத்தை முடிவு செய்கிறார்கள், மேலும் சம்பளத்தை பற்றி கேட்டாலே வில்லனாக கேமியா கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களில் எவ்வாறு என்னால் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள முடியும்.

எனக்கு எவ்வளவு சம்பளம் பாக்கி இருக்கிறது என்று தெரியுமா? எதுவுமே தெரியாமல் பொத்தாம் போக்காக பேச வேண்டாம் என்று யோகி பாபு கேட்டுக்கொண்டார். மேலும் இதற்கு முன்னனாகவே செய்தியாளர் சந்திப்பில் யோகி பாபு பேசி இருந்தார்.

அதாவது ப்ரொமோஷனல் தான் கலந்து கொள்ளாததற்கு காரணம் பல படங்களில் தான் கமிட்டாகி இருக்கிறேன். ப்ரோமோஷனில் கலந்து கொண்டால் அந்த படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பு நடத்த முடியாமல் நஷ்டத்தை சந்திப்பார். அதனால் தான் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.