1. Home
  2. கோலிவுட்

கிளைமாக்ஸ்-ல் மேரேஜ் முக்கியம் இல்லன்னு சொல்லிட்டீங்க! 3BHK இயக்குனர் ஸ்ரீ கொடுத்த விளக்கம்

கிளைமாக்ஸ்-ல் மேரேஜ் முக்கியம் இல்லன்னு சொல்லிட்டீங்க! 3BHK இயக்குனர் ஸ்ரீ கொடுத்த விளக்கம்

Movie : ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ஜூலை 4-ஆம் தேதி 3BHK திரைப்படம் ரிலீஸானது. சரத்குமார், சித்தார்த்,தேவயானி, மீதா ரகுநாத், யோகி பாபு இவர்கள் எல்லாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார் அவருக்கு மனைவியாக தேவயானி இணைந்துள்ளார். மகன் பிரபுவாக சித்தார்த்தும், மகளாக நடிகர் மீதாவும் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு நடுத்தர குடும்பத்தினர் 3BHK வீடு வாங்கும் கனவை நோக்கி பயணிக்கின்றனர். இடையில் ஏற்படும் பண சிக்கல்கள், குடும்ப பிரச்சினைகள், எதிர்பாராத திருப்புமுனைகள் இந்த சிக்கல்களை தாண்டி எப்படி நகர்கிறார்கள் என்பதே கதையின் மையப் புள்ளி.

பொருந்திப் போன கதாபாத்திரங்கள்..

திரையில் சித்தார்த்தின் சகஜமான நடிப்பால் திரையில் ரசிகர்களின் விசில் பட்டையை கிளப்பியது. நான் சரத்குமார் மற்றும் தேவயானி இந்த காம்போ எமோஷனல் கலந்த கெமிஸ்ட்ரி கொடுத்தது. மீதா ரகுநாத் தேவயானி மற்றும் சரத்குமாரின் மகளாக தனது நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார். யோகி பாபுக்கு சொல்லவே வேண்டாம் காமெடி தான் ஹைலைட்.

திருமணம் அடக்குமுறை இல்லை..

3BHK திரைப்பட விழாவில் பேசிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறியதாவது

" திருமணம் என்பது நிச்சயம் அடக்குமுறை இல்லை என்பதைத்தான் இந்த படத்தில் நாங்கள் காமித்திருப்போம். திருமண வாழ்க்கையில் சுதந்திரம், சுயமரியாதை அவசியம். ஒரு கெட்ட வாழ்க்கைல இருந்து பெண் விடுபடும் பொழுது இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

கிளைமேக்ஸ் சீனில் திருமணத்திலிருந்து விடுபட்ட அந்த பெண்ணுக்கு, மறுமணமாவது போல் காண்பிக்கலாம் என்று நினைத்தோம். இதையெல்லாம் நினைத்து தான் வேண்டாம் என நாங்கள் முடிவெடுத்தோம் - ஸ்ரீ கணேஷ்". இப்படி இவர் பேசியது வலைத்தளத்தில் செம்ம டிரெண்டாகி வருகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.