செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தமிழில் அடுத்த மேடியாக கால் பதிக்கும் சாக்லேட் பாய்.. மாதவன், அரவிந்த் சாமியை மிஞ்சும் அந்தத் திறமை

Chocolate: ஹீரோயின்களுக்கு பிடித்த ஹீரோக்கள் வரிசையில் சில சாக்லேட் பாய் நடிகர்கள் இருப்பார்கள். அப்படி குஷ்பு முதல் சிம்ரன் வரை பல ஹீரோயின்கள் தங்களுடைய ட்ரீம் பாய் மாதவன் மற்றும் அரவிந்த்சாமி தான் என்று கூறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு பல நடிகைகளின் கனவு நாயகனாக திகழ்ந்து வந்தனர்.

அதன் பின் பல இளம் ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் வந்தாலும் இவர்கள் இடத்தை பிடிக்க முடியவில்லை. ஷியாம், ஹரிஷ் கல்யாண் என சில சார்மிங் ஹீரோக்கள் களம் கண்டாலும் சாக்லேட்பாய்க்கு உண்டான இடம் வெற்றிடமாகவே இருந்தது. இப்பொழுது அந்த இடத்தை பிடிக்க புதிதாய் ஒரு மலையாள ஹீரோ தமிழ் பக்கம் வந்துள்ளார்.

மலையாளத்தில் இவர் நடித்த முக்கால்வாசி படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது. கும்பலினி நைட்ஸ், அன்வர், இஸ்கு, கிஸ்மத் போன்ற படங்களில் நடித்தவர் ஷான் நிகாம். இப்பொழுது தமிழ் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே ஒரு படம் நடித்து முடித்து இருக்கிறார் கூடிய விரைவில் அது ரிலீசாக உள்ளது.

மாதவன், அரவிந்த் சாமியை மிஞ்சும் அந்தத் திறமை

ஆர் டி எக்ஸ் என்னும் மலையாள படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராகிய ஷான் நிகாம் நடித்திருந்தார். அந்த படத்தில் கராத்தை மாஸ்டராக, ஒரு ஆக்சன் கலந்த காதல் ஹீரோவாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை அடித்து விட்டார். ஆறடியில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் ஷான் நிகாம்.

மாதவன் மற்றும் அரவிந்த்சாமி இருவருக்கும் நடனம் அவ்வளவாக வராது. ஆனால் நிகாம் நடனத்தில் பட்டையை கிளப்புகிறார். ஆர் டி எக்ஸ் படத்தில் இவர் ஆடிய நடனம் பிரமிக்க வைத்திருந்தது. “நீல நிலவே” பாட்டில் இவரது வித்தியாசமான நடன அசைவுகள் இவரை டான்சராகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

இப்பொழுது இவர் மெட்ராஸ் காரன் என்னும் தமிழ் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் எஸ்ஆர் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த படம். ஷான் நிகாம். மற்றும் கலையரசன் இருவரும் இணைந்து நடித்துள்ள “மெட்ராஸ்காரன்” படம் ஒரு வித்தியாசமான திரில்லர் கதையாம்.

Trending News