வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிக்பாஸ் அல்டிமேட்டில் கழுத்தைப் பிடித்து தள்ளப்போகும் முதல் நபர்.. சிம்புவின் வெறித்தனம் ஆரம்பம்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று, முதலில் கமலஹாசனும் தற்போது சிம்புவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் ஏற்கனவே எலிமினேட் ஆன சுரேஷ் சக்கரவர்த்தி கொளுத்திப் போடும் வேலையை கச்சிதமாக செய்வதால், அவர் நிகழ்ச்சியில் இருந்தால் கூடுதல் சுவாரசியம் தரும் என்பதற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மீண்டும் வருகை தந்திருக்கிறார்.

அதைப்போல் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜய் டிவியின் கேபிஒய் பிரபலம் சதீஷ் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 15-வது போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருக்கிறார். இன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேறும் நபர் யார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஜூலி, சினேகன், அனிதா, தாடி பாலாஜி, சுருதி, அபிராமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சுருதி, சினேகன், தாடி பாலாஜி ஆகிய மூன்று பேரும் டேஞ்சர் ஜோனின் உள்ளனர்.

அத்துடன் இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்டில் இவர்கள் மூன்று பேரும், கடைசி மூன்று இடத்தை பிடித்திருக்கின்றனர். ஆகையால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இந்த வாரத்தில் சிம்பு வெளியேற்றும் முதல் நபராக சுருதி மற்றும் சினேகன் இருவரில் ஒருவராக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

இருப்பினும் கடைசி நேரம் ஓட்டிங் லிஸ்டில் மாற்றம் ஏற்பட்டு, நாளை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்பதையும், யார் வெளியேற போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News