வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொதுவெளியில் அநாகரியமாய் போட்ட சண்டை.. 17 வருடமாக பாரதிராஜாவுடன் இணையாத டாப் நடிகர்

இயக்குனர் இமயம் பாரதிராஜா 1977 ஆம் ஆண்டு கோலிவூடில் தன்னுடைய முதல் படமான ’16 வயதினிலே’ மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கிராமத்து கதைகளை கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கோட்டையையே உருவாக்கினார். கிழக்கே போகும் ரெயில், மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் என கிராமத்து கதைகளில் கோலோச்சிய பாரதிராஜா ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற திரில்லர் படங்களையும் இயக்கியுள்ளார்.

ரேகா, ரேவதி, ராதிகா, ராதா, ரஞ்சனி, ரதி, பாக்யராஜ், நெப்போலியன், ஜனகராஜ், வடிவுக்கரசி, பாண்டியன், மனோபாலா, மணிவண்ணன், சித்ரா லக்ஷ்மணன், சுகன்யா, பொன்வண்ணன், ரஞ்சிதா என கோலிவுட்டின் ஒரு மிகப்பெரிய ஆதாரமான நடிகர் நடிகைகளையே அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா தான்.

சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் என பல டாப் நடிகர்களுடன் பாரதிராஜா இணைந்து பணியாற்றியுள்ளார். ஆனால் பாரதிராஜா ஒரே ஒரு நடிகருடன் மட்டும் இதுவரை சேரவே இல்லை, அவரும் டாப் நடிகர் தான், பல கிராமத்து கதைகளில் நடித்து வெற்றி கண்டவர் தான். இவர்கள் இருவர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் 17 வருடமாக ஒன்றாய் சேர்ந்து பணியாற்றவே இல்லை.

Also read:முன்னணி ஹீரோவை வேண்டாமென ஒதுக்கிய பாரதிராஜா.. இப்ப அங்க அவர் தான் சூப்பர் ஸ்டார்

80 களின் இறுதியில் சிறு சிறு கதாபாத்திரகளில் நடித்து 90 களின் நடுவே முழுநேர கதாநாயகனாக மாறியவர் தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். சேரன் பாண்டியன், கட்டபொம்மன், மூவேந்தர், நாட்டாமை, நட்புக்காக என பல கிராமத்து கதைகளில் நடித்த இவர் இதுவரை பாரதிராஜாவின் படங்களில் நடிக்கவில்லை.

Also Read: பாரதிராஜா அறிமுகத்தில் காணாமல் போன ஒரே நடிகை..

தகப்பன் சாமி என்னும் திரைப்படத்தில் இருவரும் நடிக்கவிருந்த நிலையில், காவிரி பிரச்சனைக்கான போராட்ட சமயத்தில் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய வாக்குவாதமாகவே மாறி விட்டது.

பொதுவெளியில் அநாகரீகமாக சண்டையிடும் அளவிற்கு பிரச்சனை முற்றிவிட்டது. அதன் பிறகு பாரதிராஜா தயாரிப்பாளரிடம் சரத்குமாருடன் இனி கூட்டணி கிடையாது  என கூறிவிட்டாராம்.

Also read:பாரதிராஜா வாங்கிய 6 தேசிய விருது படங்கள்.. இப்ப வர மறக்கமுடியாத கள்ளிப்பால் கருத்தம்மா

இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் தேனப்பன் பகிர்ந்துள்ளார். சினிமாவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றாக நடிக்க வாய்ப்பு அமையாது, சிலநேரங்களில் இது போல் வெளிவராத ஈகோ பிரச்சனைகளும் சில நடிகர்களிடையே உண்டு.

பாரதிராஜா மற்றும் பாலாவுக்கு இடையே வாக்குவாதம்

director-bala-bharathiraja-photo
director-bala-angry-on-bharathiraja

சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று தனித்தனியான திறமைகள் இருக்கும். அந்த வகையில் பாலாவும் சளைத்தவரல்ல, சில மாதங்களாக குற்றப்பரம்பரை என்ற கதையை படமாக உருவாக்குவதற்காக பாரதிராஜா மற்றும் பாலாவுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த சண்டையெல்லாம் இல்லை என்றால் தமிழ் சினிமா பல பெரிய கூட்டணியுடன் வேற லெவலில் இருந்திருக்கும். எல்லாத்துக்கும் காரணம் ஈகோ.

Also Read: இறுதி பஞ்சாயத்தில் இறங்கிவந்த பாலா, பாரதிராஜா.

Trending News