செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ரகசியமாய் நிச்சயதார்த்தம் நடத்திய நட்சத்திர தம்பதி.. 40 வயது மாப்பிள்ளையை கைபிடிக்கும் நிக்கி கல்ராணி

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே நிக்கி கல்ராணி ஏராளமான ரசிகர்களை பெற்றார். அதன்பிறகு குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்திருந்தார்.

நிக்கி கல்ராணி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் டார்லிங் படத்திற்குப் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகவராயினும், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

சமீபத்தில் நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி காதலித்து வருவதாக இணையத்தில் கிசுகிசு வந்தது. இவர்கள் இருவரும் யாகவராயினும், மரகத நாணயம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் நடித்ததன் மூலம் இருவரும் காதலித்து மிக விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்ட வந்தது.

ஆனால் இது வதந்தியாக இருக்கும் என பலரும் கருதிய நிலையில் இருவருக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிச்சயதார்த்தம் எக்ஸ்பிரஸ் அவன்யூ பக்கத்தில் உள்ள நிக்கி கல்ராணி பிளாட்டில் படு ஜோராக நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் நிக்கி கல்ராணி,அவரை தமிழில் அறிமுகப்படுத்திய நபர்களை கூட அழைக்க வில்லையாம். ஆனால் தெலுங்கு சினிமாவில் அவருக்கு வேண்டியவர், வேண்டாதவர்கள் அனைவரையும் அழைத்து விழாவை மிகவும் சிறப்பாக நடத்தி உள்ளனர்.

நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நிக்கி கல்ராணியின் இடியட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில்மிக விரைவில் நிக்கிகல்ராணி, ஆதி திருமணம் நடக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Trending News